இலங்கை பேரீச்சம் பழம்... |
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களில் காய்த்து பழமாகியுள்ள பேரீச்சம் பழங்களை வைபவரீதியாக பறிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.![]() பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர். காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத் உட்பட முக்கியஸ்த்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். முதலாவது பேரீச்சம் பழத்தை வைபவ ரீதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பறித்தார். காத்தான்குடி பிரதான வீதியில் எண்பது பேரீச்சம் பழ மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Wednesday, 21 September 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment