Wednesday, 14 September 2011


5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?

Font size:   
5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
அமெரிக்காவை சேர்ந்த சாக்லேட் நிறுவனம் 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லேட் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த நிறுவனம் ‘வேர்ல்ட்ஸ் ஃபைனஸ்ட் சாக்லேட்’… சாக்லேட் தயாரிப்பில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்தது. லாபத்தில் பெரும் பங்கை தொண்டு நிறுவனங்களுக்கும் சமூக பணிகளுக்கும் வழங்கி வருகிறது. 540 கிலோ பாதாம்பருப்பு,  2494 கிலோ சர்க்கரை ,907 கிலோ பால் பவுடர், 771 கிலோ கோகோ, 635 கிலோ சாக்லேட் எசன்ஸ் கலந்து இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. லிமிட்டா சாப்பிடுங்க பெரிசா சாதனை பண்ணுங்க’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள் தோறும் ஊர்வலம் போகப் போகிறது கின்னஸ் படைத்துள்ள இந்த சூப்பர் சாக்லேட்.




No comments:

Post a Comment