சுவையுங்கள்

ஸெய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்  நாணமும்                      
ஒரு நாள் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மனைவியும், முஃமின்களின் அன்னையுமான ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். அவர்கள் ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் விரிப்பில் ஒருக்கணித்து சாய்ந்துப் படுத்து இருந்தார்கள். அதே சமயம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கீழாடையும் முழங்கால் வரை சற்று மேலே ஏறி இருந்தது. 

அந்தசமயம் செய்யதுனா அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லத்திக்குள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எந்த நிலையில் சாய்ந்து படுத்திருந்தார்களோ அதே நிலையில் படுத்தவாறே அவர்களோடு உரையாடினார்கள். வந்த விஷயத்தை பேசிவிட்டு அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்று விட்டார்கள்.

சற்று நேரத்திற்குப் பின் செய்யதுனா உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அனுமதி கேட்டார்கள். அதே நிலையில் படுத்தவாறே அவர்களையும் உள்ளே வர அனுமதி அளித்தார்கள். சில விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். வந்த விஷயத்தை பேசி முடித்துக் கொண்டு உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் விடை பெற்று சென்று விட்டார்கள்.

அடுத்ததாக செய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து உள்ளே வர அனுமதி கேட்டு நின்றார்கள். வெளியே நிற்பது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்பதை அறிந்தவுடன், பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உடனே எழுந்து அமர்ந்தார்கள். தங்கள் ஆடைகளை நன்றாக ஒழுங்குப் படுத்திக் கொண்டு, அருகில் இருந்த ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமும், " ஆடையை ஒழுங்குப்படுத்திக் கொள் " என்று கூறினார்கள். 

பின்னர் செய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்களும் உள்ளே வந்து சில விஷயங்களைப் பேசிவிட்டு சென்று விட்டார்கள்.

அப்போது ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், " நாயகமே! தாங்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பதற்றமுற்றதை போல், அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பதற்றமுற நான் காணவில்லையே அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா யா ரசூலல்லாஹ் ?? " என்று கேட்க, 

அதற்கு பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், " ஆயிஷாவே! நிச்சயமாக, உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிக நாணமுள்ளவர்கள். நான் இருந்த அதே நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தால் அவர்கள் நாணத்தால் வந்த அலுவலை அவர்களால் செய்து கொள்ள முடியாமல் போய் இருக்கும். மேலும் மலக்குமார்கள் நாணமுறும் ஒருவரிடம் நான் நாணமுற வேண்டாமா? " என்ற கருத்தை பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தெரிவித்தார்கள். 



கவலைக்கு மருந்து 

ஒரு நாள் பிரபல மருத்துவர் ஒருவரிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர் என்னை சோதித்து பாருங்கள்" என்றார். "ஏன் உங்களுக்கு என்ன செய்கிறது" என்றார் டாக்டர். அவ்வளவுதான் தமக்கிருப்பதாக தாமே நினைத்து கொண்ட ஆயிரம் நோய்களை அழாக்குரையாக கூறி முடித்தார். "அப்படியா" என்று கேட்டு கொண்டே வந்த டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்து முடித்தார்.

"எனக்கு என்ன வியாதி என்பதை கண்டுபிடித்தீர்களா" என்று பதட்டத்தோடு கேட்டார் நோயாளி.

"உங்களுக்கு எந்த நோயும் இல்லை. நீங்கள்தான் கண்டதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்."

"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"

"ஆமாம் இப்போது உங்களுக்கு தேவை மருத்துவமல்ல. மன மகிழ்ச்சி. நான் சொல்வது போல் செய்யுங்கள். இன்று நம்மூரில் நடக்கும் சர்கசுக்கு செல்லுங்கள். அங்கே கிரிபால்டி என்னும் கோமாளி வருவான். அவன் ஏராளமான வேடிக்கைகள் செய்வான். நிச்சயமாக அவன் தன் வேடிக்கைகளால் உங்களை சிரித்து பிரள வைத்து விடுவான். நான் சொல்கிறேன். நம்புங்கள். உலகில் உள்ள எல்லா மருந்துகளை விடவும் இப்போது உங்களுக்கு நன்மை பயக்க கூடியது இதுதான்"

மருத்துவரை பரிதாபத்தோடு பார்த்தார் நோயாளி. "டாக்டர் அந்த கிரிபால்டியே நான்தான்" என்றார் அழாக்குரையாக.

கல்லும் சொல்லும்
                          ஒருமுறை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீத் சபைக்கு வந்ததும் எல்லோரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். பின்னர் கலீபா தம் ஊழியன் கொண்டு வந்த பையிலிருந்து ஒவ்வொரு வைரக்கல்லாக எடுத்து பிரதானிகள் எல்லோருக்கும் கொடுத்தார். எதற்காக தருகிறார் கலீபா என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனர் பிரதானிகள். பின்னர் பிரதானிகளை பார்த்து எல்லோரும் தம் கைகளிலுள்ள வைரக்கற்களை ஓங்கி அடித்து உடைத்தெறியுங்கள் என்றார் கலீபா. எல்லோரும் இவ்வளவு விலை உயர்ந்த கற்களை எப்படி உடைப்பது என்று திகைத்து போய் நிற்க, ஆணை பிறந்த அடுத்த கனம் சடார் என்று ஒரு சத்தம் கேட்டது. ஓங்கி உடைத்தவர் அபூநவாஸ். எல்லோரும் உடைக்காதிருக்க நீ மட்டும் உடைத்ததற்கு காரணம் கேட்டார் கலீபா. அதற்கு "கலீபாவின் சொல்லை உடைப்பதை விட கல்லை உடைப்பது மேல் என்று கருதித்தான்" என்றார் நகைச்சுவை மன்னர் அபூநவாஸ்.
அதிசய வழக்கு 

ஒருநாள் இரு சகோதரர்கள், செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் முன் வந்து "நபி அவர்களே, எங்களின் தந்தையார் எங்கள் இருவர் மீதும் ஒத்த அன்புடையவராக இருந்தார். ஆனால் அவர் இறப்பு படுக்கையில் கிடக்கும்போது எங்களை அருகில் அழைத்து எங்களுக்கு அறிவுரை பல வழங்கினார். இறுதியாக இறக்கும் முன் எங்களை பார்த்து "என் சொத்து அனைத்தும் உங்களில் ஒருவனுக்கே உரியதாகும்." என்று கூறினார். அது யார் என்று கூறவில்லை. எனவே அவரது சொத்து அனைத்தும் யாருக்கு உரியது என்று அறியாது விழிக்கிறோம்" என்று கூறினார்கள். எவ்வாறு இவ்வழக்கில் நீதி பகர்வது என்று செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் யோசித்தார்கள். அப்போது அங்கிருந்த செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள், "தந்தையே! நீங்கள் ஆணை இடின் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்று கூறினர். "நல்லது செய்யும்" என்றனர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள்.

உடனே செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, "நீங்கள் இருவரும் சென்று உங்களின் தந்தையின் அடக்கவிடத்தை தோண்டி அவருடைய உடலிலிருந்து ஓர் எலும்பை எடுத்து வந்தால் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்றனர்.

அதற்கு மூத்தவன் "என் உயிர் போகினும் நான் அச்செயலை செய்ய மாட்டேன். நான் அச்செயலை செய்து சொத்துரிமை பெற விரும்பவும் இல்லை" என்றான். ஆனால் இளையவனோ ஓடோடி சென்று அதை எடுத்து வந்தான்.

அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி "நீங்கள் இருவரும் ஊசியால் உங்களின் விரலில் குத்தி இரத்தம் எடுத்து அந்த எலும்பின் மீது விடுங்கள்" என்றனர்.

அப்போது மூத்தவன் மிக்க கவலையோடு கண்ணீர் விட்டவனாக இரத்தம் எடுத்து விட்டான். அத்துடன் சேர்ந்து கண்ணீரும் அதன் மீது விழுந்தது. அடுத்த கணம், கண்ணீருடன் சேர்ந்த செந்நீரை, தணலிடை பதிக்கப்பட்ட இரும்பின் மீது கொட்டிய தண்ணீரை இரும்பு உண்பது போல் அவ்வெலும்பு உண்டது.

பின்னர் இளையவனும் அவ்வாறு செய்தான். அவனது இரத்தமோ அவ்வெலும்பின் மீது வழிந்தோடியது.

அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) தீர்ப்பு வழங்கினார்கள். "இறந்த தந்தையின் உடலில் இருந்து எலும்பு ஒடித்து வர விரும்பாத மூத்தவனே அவருக்கு முறைப்படி பிறந்தவன். பின்னவன் அவர் மகன் அல்ல. எனவே மூத்தவனுக்கே சொத்து அனைத்தும் உரித்து"

தீர்ப்பை கேட்டு தன் தாயிடம் ஓடோடி சென்று நடந்ததை கூறினான் இளையவன். அப்போது தாய் தன் மகனை நோக்கி "உண்மை! ஓர் இரவு தீயோன் ஒருவன் நம் இல்லம் புகுந்து தகா முறையில் வன்முறையில் என்னை புணர்ந்தான். நீ பிறந்தாய்" என்று கண்ணீர் மல்க கூறினாள். "தந்தைக்கு தெரியுமா?" என்றான் இளையவன். "குறிப்பால் இதனை அறிந்துக்கொண்டார். எனினும் இதை பற்றி அவர் என்னிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை" என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள் அவள்.

நாடுகளை சுற்றிய நபித்தோழர்

நபித்தோழர் ஒருவர் திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுத நினைத்தார்கள். அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவராயிருந்தார்கள்.

எனினும் அவருக்கு ரகீம், தபராக, மதாஉ ஆகிய மூன்று சொற்களுக்கு பொருள் என்னவென்று தெரியவில்லை. அவற்றின் பொருளை அறிவதற்காக அவர்கள் பலநாடுகளுக்கும் சுற்றித்திரிந்தார்கள். எனினும் அவர்களால் அதற்காக பொருளை அறிந்துக்கொள்ள இயலவில்லை.

பின்னர் மனம் சோர்வடைந்த நிலையில் அவர்கள் ஒரு தெருவின் வழியே சென்றுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டில் ஒரு பெண் தன அடிமையிடம், "அய்னல் மதாஉ" (உணவு சமைக்கும் பாத்திரம்?) என்று கேட்டாள். அதற்கு அவ்வடிமை "ஜாஅர் ரகீமு வ அகதல் மதாஆ வ தபாரகள் ஜிபால" (நாய் வந்து உணவு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மலை மேல் ஓடிவிட்டது) என்று கூறினாள். அது கேட்டு சோர்வடைந்திருந்த நபித்தோழரின் உள்ளம் புத்துணர்ச்சி பெற்றது. மூன்று சொற்களுக்கும் அவர்கள் பொருள் விளங்கி கொண்டார்கள்.

அதன் பின்னரே அவர்கள் திருக்குர்ஆனுக்கு தப்ஸீர் எழுதத் துவங்கினார்கள். திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதுவதில் முழுக்க முழுக்க இறைவனுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

ஆனால் இன்று அரைகுறையாக மார்க்கத்தை கற்ற எல்லோருமே திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும்.

மனிதர்களும் மாடமாளிகைகளும் 

ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் ஒரு மலை மீது ஏறி சென்றார்கள். அங்கு ஒருவர் வெயிலில் தொழுது கொண்டு இருப்பதை கண்டனர். அவர் தொழுததும் அவரிடம் சென்று "தாங்கள் வெயிலையும் மழையையும் விட்டு தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு வீட்டை அமைத்து கொள்ளக்கூடாதா?" என்று கேட்டனர். 

அதற்கு அவர் "இறைவனின் தூதரே, நான் எழுநூறு வயதுக்கு மேல் வாழமாட்டேன் என்று பல நபிமார்கள் என்னிடம் கூறி உள்ளனர். இத்தனை குறைந்த வயதை பெற்றுள்ள நான் வீட்டை கட்டுவதில் என் வாழ்நாளை செலவு செய்ய விரும்பவில்லை" என்று கூறினார். 

அப்போது செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள், அவரை நோக்கி "இதை விட ஆச்சர்யமான ஒரு விடயத்தை சொல்லவா? என்று கேட்டார்கள். 

"என்ன அது" என்று வியப்புடன் கேட்டார் அந்த மனிதர்.

"உலகின் இறுதி காலத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயது கூட வாழ மாட்டார்கள். ஆனால் அவர்களோ ஆயிரம் வருடங்கள் வாழ்வது போல் எண்ணிக்கொண்டு மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டுவதில் தமது வாழ் நாளை செலவு செய்வார்கள்" என்றனர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்)

அப்போது அந்த மனிதர் "அச்சமயம் நான் உயிரோடு இருப்பின் நான் என் வாணாளை ஒரே சஜ்தாவில் கழித்து விடுவேன்" என்று கூறினார்.

       
    நண்பரின் கேள்வியும் ஜாமியின் பதிலும்

பாரசீக மொழியில் அழியா புகழ் பெற்ற காவியங்களை எழுதியவர் மௌலானா ஜாமி. அவரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. எப்போதும் வீட்டை விட்டு வெளியே போகும்போது வீட்டு கதவுகளை திறந்து வைத்துவிடுவார். மீண்டும் வீட்டுக்குள் சென்றதும் வீட்டு கதவுகளை சாத்தி விடுவார். ஒரு நாள் நண்பர் ஒருவர் கேட்டார். "ஏன் இப்படி செய்கிறீர்கள்? எல்லோரும் உள்ளே இருக்கும்போது கதவை திறந்து வைப்பர், வெளியே போகும்போது கதவை சாத்திவிட்டு செல்வர். நீங்கள் மாறி செய்கிறீர்களே" என்பதாக. அதற்கு ஜாமி கூறினார். நான் வீட்டுக்குள் இருக்குபோது அதற்குள்ளிருக்கும் மிக விலை உயர்ந்த பொருள் நான்தான். அதனால் கதவை மூடிக்கொல்கிறேன். வெளியே செல்லுபோது வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை பற்றி நான் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை ஒன்றும் என்னை போல் விலை உயர்ந்த பொருளன்று. அதனால்தான் திறந்து போட்டு விட்டு செல்கிறேன்.

செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் எறும்பும்

ஒரு நாள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் படுத்திருக்கும்போது அவர்களின் உடம்பில் எறும்பு ஒன்று ஊர்ந்து திரிந்ததை கண்ட அவர்கள் அதனை பிடித்து வீசி எறிந்தார்கள். அப்போது அந்த எறும்பு அவர்களை நோக்கி, "நெறி நீதி மன்னனாகிய அல்லாஹ்க்கு நீரும் நானும் அடிமைகள்தான் என்பதை உணராது என்னை நீர் அகங்காரத்துடன் பிடித்து வீசி எறிந்தீர். உமக்கு வல்லமை உள்ளது என்று எண்ணி பெருமையுற்று வரும் துன்பம் பற்றி உணராது எனக்கு துன்பம் இளைத்தீர். இது பற்றி நான் மறுமையில் அல்லாஹ்வின் முன் வழக்காடுவேன்" என்றது.

அதுகேட்டு செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் திடுக்குற்றவர்களாய் அவ்வெறும்பினை நோக்கி, "எறும்பே! நான் என்ன அவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்டேன்? என பரிவோடு கேட்டார்கள். அதற்கு அந்த எறும்பு அவர்களை நோக்கி, "என்னுடைய உடலோ மென்மையானது. அதனினும் மேன்மையானது அதன் மேல் போர்த்தப்பட்டுள்ள தோல். அப்படி இருக்க நீர் என்னை வெளியே தூக்கி எறிந்தீர். இதை விட பெரும் தீங்கு வேறொன்று இருக்கிறதா? வலியவர் எளியவர்களை மதித்திடாது, அவர்களுக்கு தீங்கு இழைப்பது பண்பு என்றால் கடலானது அலைஎரிந்து அவனி முழுவதையும் அழித்திடாமல் இருக்க காரணம்தான் என்ன? அதனுடைய இயலாத்தன்மைதானா? நீங்களோ அவனி புரக்க வந்த அரசர் மட்டுமல்ல மக்களை நேர வழி நடத்த வந்த நபியும் ஆவீர்கள். நீங்களே இவ்வாறு செய்தால் மற்றவர்களை பற்றி என்ன சொல்வது? என்று இடித்துரைத்தது.

எறும்பின் இந்த இடிமொழி செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களை ஒரு குலுக்கு குலுக்கியது. அவர்கள் எறும்பை நோக்கி, "எறும்பே! நான் வேண்டுமென்றே உனக்கு துன்பம் இழைக்கவில்லை. நீ என் மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்து நான் அறியாமலேயே உன்னை பிடித்து வீசி எரிந்து விட்டேன். எனினும் பிழை பிழைதான். அதிலிருந்து தப்ப முடியாது. எனினும் என் பிழையை பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்கள்.

அப்போது அவ்வெறும்பு "நீர் எனக்கு மூன்று வாக்குறுதிகளை அளிப்பின் நான் உம் பிழையை பொறுப்பேன். இல்லையென்றால் பிழை பொறுக்க மாட்டேன்" என்று கூறியது.
செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் "அவ்விதமே அவற்றை அளிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அவ்வெறும்பு "தாவூதின் மகனாரே! நீர் உலக ஆசாபாசங்களில் உழலாதீர். அதிகமாக சிரிக்காதீர். உம்மிடம் ஒருவர் உதவி தேடிவரின் அவரை வெறுமனே திருப்பி அனுப்பாதீர்" என்று கூறியது. "வாக்குறுதி காக்கிறேன்" என்றார்கள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள். அது கேட்டு அகமகிழ்ந்து அவ்வெறும்பு நான் உம் பிழை பொறுத்தேன்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றது. 


ஒதுங்குவதற்கு நிழல்

ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் வெட்ட வெளியில் கடும் மழையில் அகப்பட்டு கொண்டனர். ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது அங்கு ஒரு குடில் தென்பட்டது. அதை நோக்கி சென்றனர். அதில் ஒரு பெண் இருந்தாள். அதில் அவர்கள் நுழையாது வேறிடம் தேடி சென்றனர். ஒரு குகையை கண்டு அதற்குள் எட்டி பார்த்தனர். அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்து கொண்டு இருந்தது.

அப்போது செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! உன்னுடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ஒதுக்கி கொடுத்து உள்ளாய். எனினும் எனக்குத்தான் ஒதுங்க ஓர் இடமும் இல்லை" என்று கூறினர்.

அதற்கு அல்லாஹ், "ஈசா! ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை? என்னுடைய ஆழமான அன்பு உமக்கு என்றென்றும் உண்டு. என்னுடைய அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் ஒதுங்கி நிற்க வேண்டும். இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் மிக பெரியது. இம்மையில் ஒரு மனிதனின் முழு ஆயுளை மறுமையில் ஒரு தினத்துக்கு ஒப்பிடலாம்" என்று பதிலிறுத்தான். அப்பொழுது அவர்களின் கண்முன் அழகிய மாளிகை ஒன்று காட்சியளித்தது. அல்லாஹ் மீண்டும் அவர்களை நோக்கி "ஈசா! இம்மாளிகை வேண்டுமாயின் உமக்கு கிடைக்கும். ஆனால் நாம் உமக்கு தந்துள்ள நபித்துவமானது இதைவிட எத்துனை மடங்கு மாண்புடையது" என்று கூறினான். 





அற்புத துஆ 

ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார். 

அது கேட்ட அவர்கள், "என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, "நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது." என்றார்கள். 

அதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, "அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது" என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்." என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள். 

அது வருமாறு:- 

"அல்லாஹும்ம அன்த ரப்பீ 
லாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து 
வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம். 
மாஷா அல்லாஹுகான வமாலம் 
யஷஹ லம்யகுன் வலா ஹவ்ல 
வல குவ்வத்த இல்லா பில்லாஹில் 
அலிய்யில் அளீம்.
அஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.
வ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா. 
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க 
மின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி
தாபத்தின் அன்த்த ஆகிதுன் 
பி நாசியத்திஹா இன்ன ரப்பீ 
அலா சிராத்திம் முஸ்தகீம்."




இதய நோய்க்கு நிவாரணம் 

மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும் , பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக!

பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக!

பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக!

இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார்.

இவ்வாறு
الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد

ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை



 கல்லும் சொல்லும்
                          ஒருமுறை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீத் சபைக்கு வந்ததும் எல்லோரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். பின்னர் கலீபா தம் ஊழியன் கொண்டு வந்த பையிலிருந்து ஒவ்வொரு வைரக்கல்லாக எடுத்து பிரதானிகள் எல்லோருக்கும் கொடுத்தார். எதற்காக தருகிறார் கலீபா என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனர் பிரதானிகள். பின்னர் பிரதானிகளை பார்த்து எல்லோரும் தம் கைகளிலுள்ள வைரக்கற்களை ஓங்கி அடித்து உடைத்தெறியுங்கள் என்றார் கலீபா. எல்லோரும் இவ்வளவு விலை உயர்ந்த கற்களை எப்படி உடைப்பது என்று திகைத்து போய் நிற்க, ஆணை பிறந்த அடுத்த கனம் சடார் என்று ஒரு சத்தம் கேட்டது. ஓங்கி உடைத்தவர் அபூநவாஸ். எல்லோரும் உடைக்காதிருக்க நீ மட்டும் உடைத்ததற்கு காரணம் கேட்டார் கலீபா. அதற்கு "கலீபாவின் சொல்லை உடைப்பதை விட கல்லை உடைப்பது மேல் என்று கருதித்தான்" என்றார் நகைச்சுவை மன்னர் அபூநவாஸ்.

கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் வாழ்வினிலே!!!
                         
ஒரு முறை கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் சமூகம் ஒரு வயதான பெண்மணி வந்து, தன்னுடைய மகனை கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் கல்லூரியில் சேர்த்து கல்வி கற்றுக் கொடுக்குமாறு கௌது நாயகம் رضي الله عنه அவர்களிடம் வேண்டிக் கொண்டாள். அதற்கு கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டார்கள்.

சில காலம் கழித்து அந்த பெண்மணி தன் மகனை பார்க்க வந்த போது, அவன் மெலிந்து துரும்பாகி காய்ந்த ரொட்டிகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அதை கண்டு பெற்ற மனம் பித்தானது. பின்னர் அவள் கௌது நாயகம் رضي الله عنه அவர்களிடம் வந்த போது, அவர்கள் பொறித்த கோழியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைக் கண்டு ஆத்திரப்பட்டு அவள் அவர்களை நோக்கி, " ஷைகு அவர்களே! தங்களை பெரிய மகாத்மா என்றும், மாமேதை என்றும் கூறுகின்றார்கள். என் மகன் இங்கு தங்களிடம் ஓத வந்து, காய்ந்த ரொட்டிகளை உண்டு உருத்தெரியாது ஓடாகிவிட்ட போது, தாங்கள் மட்டும் பொரித்த கோழியை உண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேட்டாள்.

அது கேட்ட கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் ஒரு புன்முறுவல் பூத்தவண்ணம், தாங்கள் மென்று கக்கி இருந்த அந்த கோழியின் எலும்புகளை ஒன்று சேர்த்து,
" மக்கிப்போன எலும்புகளை உயிர்ப்பிக்க கூடிய அல்லாஹ்வின் ஆணையினால் நீ உயிர் பெற்று எழு" என்று கூறினார்கள்.

அடுத்த நிமிடம் அந்த கோழி உயிர் பெற்று கொக்கரித்துக் கொண்டு நின்றது. அதுக்கண்டு அந்த பெண்மணிக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் அவளை நோக்கி, " தாயே! உன்னுடைய மகன் இப்படி செய்யும் ஆற்றலை பெற தகுதி பெற்றுவிட்டால் அவன் இதனை சாப்பிட ஒரு தடையும் இல்லை " என்று கூறினார்கள்.

பிற்காலத்தில் அவளின் மகன் ஞானமார்க்கத்தில் தேர்ச்சிப் பெற்று, சிறப்புற்று விளங்கினார். அப்பொழுது ஒரு முறை அவள் தன் மகனை பார்க்க வந்தபோது, கௌது நாயகம் رضي الله عنه அவர்களோடு தன் மகனும் அமர்ந்து பொறித்த கோழியை சாப்பிட்டு கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காது பார்த்து மகிழ்ந்தாள்.

அப்பொழுது கௌது நாயகம் رضي الله عنه அவர்கள் அவளுடைய மகனுக்கு ஆணை பிறப்பிக்க, அவர்கள் மென்று போட்ட எலும்புகளை நோக்கி அந்த மகன், அல்லாஹ்வின் ஆணையினால் உயிர் பெற்று எலும்புமாறு கூற, அந்த எலும்புகள் ஒரு நொடிப்பொழுதில் சேவலாக உருவெடுத்து 'கொக்கரகோ' என்று கூவியது.

அதைப் பார்த்த அந்த பெண்மணி மிக சந்தோசம் அடைந்தாள். தன் மகனை வாழ்த்தி, கௌது நாயகம் رضي الله عنه அவர்களின் சமூகத்தில் அவர்களுக்கு தொடர்ந்தும் தொண்டாற்றுமாறு பணித்து விட்டு விடை பெற்றாள்.

இவ்வாறு ஒவ்வொரு மனிதர்களையும் புனிதர்களாக்கி, பாவத்தில் மூழ்கி இருந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் இட்டு சென்று அவர்களை சிறந்த மகான்களாகியவர்கள் கௌது நாயகம் رضي الله عنه அவர்கள்.









இறைநேசத்தின் பின் அனைத்தும் வெறுப்பே! 
இறைநேசம் உள்ளத்தில் குடிக்கொண்ட பின்னர் மற்றெல்லாம் வெறுப்பாகவே காட்சியளிக்கும்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், "தந்தையே! பத்ருப்போரில் நான் காபிர்கள் அணியில் சேர்ந்து போர்செய்த நேரம் பலதடவை தங்களை கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் வாழ் அருகே நீங்கள் பலதடவை வந்துவிட்டீர்கள். ஆயினும் நான் தந்தையாயிற்றே என்று எண்ணி தங்களை விட்டுவிட்டேன்" என்றார். இதனை கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அதே சந்தர்ப்பம் அப்போது எனக்கு கிடைத்திருக்குமானால் உன்னைக்கொல்லாமல் விட்டிருக்கமாட்டேன்" என்றார்கள். இறை நேசம் பிள்ளை பாசத்தையும் மிஞ்சிவிட்டதல்லவா? 






இமாம் ஹுசைன் மற்றும் இமாம் ஹசன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் - அல்லாஹ்வின் முடிவும்                                

ஒரு முறை இமாம் ஹுசைனார் அவர்களும் இமாம் ஹசனார் அவர்களும் ஒரு குறிப்பேட்டில் சில சொற்களை எழுதிக்கொண்டு இருவரும் தத்தந் கையெழுத்து தான் அழகு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள்.

அவ்விருவருமே கடைசி வரையில் சமாதானம் ஆகவில்லை. இமாம் ஹசனார் அவர்கள் கூறினார்கள் ஒ ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு ) அடம் பிடிக்காதே. நாம் இருவரும் பாட்டனாரிடம் பொய் கேட்போம். அவர்கள் கூறட்டும் உன்னுடைய கையெழுத்து அழகானதா இல்லை என்னுடைய கையெழுத்து அழகானதா என்று. இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு இதற்க்கு சம்மதித்தார்கள்.

இரு சிறுவர்களும் தன்னுடைய பாட்டனார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருச்சன்னிதானதிற்கு வருகை புரிந்தார்கள்.

இமாம் ஹசனார் அவர்கள் கூறலானார்கள்...

என் அருமை பாட்டனாரே தாங்களே இதை பாருங்கள் என்னுடைய கையெழுத்து தானே அழகாக இருக்கின்றது. என் தம்பி (இமாம்) ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) தன்னுடைய கையெழுத்து தான் அழகாக இருக்கின்றது என்று அடம் பிடிகின்றார். நீங்களே கூறுங்கள் யா ரசூல்லுல்லாஹ்.

இதை கூர்ந்து கவனித்த இமாம் ஹுசைன் அவர்கள் இல்லை இல்லை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன், தாங்களே பாரும் யா ரசூல்லுல்லாஹ் என்று தன்னுடைய கையெழுத்தை காண்பித்தார்கள். நாயகம் அவர்களோ தன்னுடைய இரு பேரக்குழந்தைகளின் தந்தையான சையதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹுல் கரீம் அவர்களிடம் சென்று கேட்குமாறு கூறினார்கள்.

இரு குழந்தைகளும் தன்னுடைய அன்பு தந்தையிடம் சென்று கூறினார்கள். எங்கள் தந்தையே இவற்றில் யாருடைய கையெழுத்து அழகாக இருக்கின்றது எழுதிய குறிப்பேட்டை காண்பித்தவாறே கேட்டார்கள்.

தன்னுடைய வாழ்வில் பலப்பல குழப்பமான நிலையை மிக எளிதாக தீர்வுகளையும் முடிவுகளையும் எடுத்த அந்த அல்லாஹ்வின் புலி இதைக்கண்டு தயக்கம் அடைந்தார்கள். இருவரின் கையெழுத்தும் அழகாக இருந்தும் தன்னுடைய எந்த ஒரு பிள்ளையின் மனதையும் புண்படுத்தகூடாது என்று எண்ணி நிலைமையை சமாளிக்க தன்னுடைய அன்பு மனைவி சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி இரு பிள்ளைகளையும் செய்கை காட்டினார்கள்.

என் அருமை பிள்ளைகளே இருவரின் கையெழுத்தை பற்றி உங்கள் அம்மா அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் சென்று கேட்கவும் என்று சொன்னார்கள்.

சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தையான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சபைக்கு செல்லுமாறு கேட்டுக்கொன்றார்கள்.

இந்த உலகில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ அலைஹி வ ஸல்லம் அவர்களை தவிர முடிவு எடுப்பதிலும் தீர்ப்பு வழங்குவதிலும் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. (RasoolAllah Sallallahu Alaihi wa Sallam, the greatest and most exalted decision maker in the world)

முஹம்மத் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் அருமை குழந்தைகளே உங்களில் எவர்மனதையும் புண்படுத்த கூடாது என்பதற்காக. உங்களின் இந்த பிரச்சனைக்கு ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் தீர்வு கூறுவார்கள் என்றார்கள்.

சற்று நேரத்தில் ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் விஜயம் புரிந்தார்கள். யா ரசூல்லுல்லாஹ் தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதாக.

இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் இந்த பிரச்சனைக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். நான் சொர்கத்திலிருந்து ஒரு பழத்தை கொண்டு வந்துள்ளேன். இதை நான் சற்று மேல உயர வீசுகின்றேன் எவருடைய குறிப்பேட்டில் இந்த பழமானது விழுகின்றதோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கையெழுத்து தான் அழகாமது என்று கூறினார்கள்.

பழத்தினை மேல தூக்கி எறிந்த பொது அது காற்றில் தானாகவே இரு துண்டுகளாக பிளந்து அவற்றில் ஒரு துண்டு சையதினா இமாம் ஹசன் அவர்களின் குறிப்பேட்டில் மேல் விழுந்தது. மற்றொண்டு சையதினா இமாம் ஹுசைன் அவர்களின் குறிப்பேடின் மீது விழுந்தது.

அல்லாஹ்வின் தீர்ப்பின் படி இருவரின் கையெழுத்தும் அழகனதாம் என்று கூறி ருஹுள் அமீன் அவர்கள் விடை பெற்றார்கள்.

இரு குழந்தைகளின் உள்ளமும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. புன்சிரிப்புடன் இரு குழந்தைகளை எல்லோரும் கண்டு மகிழ்தனர்.




கடலிலும் திடலிலும் ஆட்சி 

ஒரு நாள் இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடற்கரையில் அமர்ந்து தனது கிழிந்த ஆடைகளை தைத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வழியே வந்த பல்க் நாட்டு அமைச்சர் ஒருவர் தனது அரசராக இருந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இன்றைய நிலையை பார்த்து மனதுக்குள் அரச போகத்தை விட்டு விட்டு இப்படியொரு ஏழ்மையை எந்த புத்திசாலியாவது விரும்புவானா? என்று அங்கலாய்த்தார். இதை உள்ளுணர்வு மூலம் அறிந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் கையிலுள்ள ஊசியை அந்த அமைச்சர் பார்க்கும் வகையில் கடலில் வீசிவிட்டு "கடல்வாழ் மீன்களே என் ஊசியை எடுத்து வாருங்கள்" என்று குரல் கொடுத்தார்கள். இவர்களின் குரலை கேட்ட லெட்சக்கணக்கான மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தங்க ஊசியை வாயில் கவ்விக்கொண்டு கடலின் கரைக்கே வந்து "இதோ ஊசியை கொண்டுவந்தோம்" என்று கூறின. இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "யா அல்லாஹ்! நான் கடலில் வீசிய எனது ஊசித்தான் எனக்கு வேண்டும்" என்று கேட்டார்கள். உடனே ஒரு மீன் அவர்கள் வீசிய அதே ஊசியை எடுத்து கொணர்ந்து ஆஜர்படுத்தியது. அப்பொழுது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த அமைச்சரை பார்த்து, "மன அரசாட்சி மேலானதா? இல்லை கேவலம் மண் அரசாட்சி மேலானதா?" என்று கேட்டார்கள். இதனை கண்ணுற்ற அமைச்சர் கடல் மீன்கள் கூட இறை நேசரை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறது. அவைகளோ சாதாரண உயிரினம். நாம் மனிதனாக இருந்தும் கூட இக்காலத்து இரைநேச தலைவரை தெரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தியவராக ஸலாம் கூறி திரும்பி சென்றுவிட்டார். 





வீராதி வீரர் அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு 

அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது மகனாவார்கள். அவர்கள் உருவ அமைப்பில் தம் பாட்டனார் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை ஒத்தியிருந்தனர்.

கர்பலாவில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர் அப்பாஸ் இறந்ததும், இவர்கள் தம் தந்தையாரின் அனுமதி பெற்று போருக்குப் புறப்பட்டனர். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாருக்காக துஆச் செய்து குதிரை மீதமர்த்தி அனுப்பி வைத்தனர். வீராவேசத்துடன் மின்னலாய் பரந்த அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "நான் அலியின் மகன் ஹுசைனின் மகன் அலியாவேன்" என்று சப்தமிட்டுக் கொண்டே சென்று எதிரிகளுள் இருபது பேர்களுக்கு அதிகமானோரை வெட்டி வீழ்த்தினர்.

கடுமையான வெயில், தாக மேலிட்டால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவர்கள் தமக்கு நேரிட்ட தாகத்தின் கடுமையை தம் தந்தையிடம் எடுத்துரைக்க, ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் நாக்கை நீட்டி அதிலுள்ள நீரை மகனைப் பருகுமாறு செய்தார்கள். அதனைத் தவிர்த்து அவர்களுக்கு அப்பொழுது வேறு வழி தெரியவில்லை.

அதன் பின்னர் அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் களத்தில் குதித்தார்கள். அப்பொழுது எதிரி ஸினான் இப்னு அனஸ் என்பவனது ஈட்டி அவர்களின் முதுகில் பாய்ந்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்த அவர்கள், தந்தை ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "அருமை தந்தையே! என் பாட்டனார் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சுவனத்து பானத்துடன் என்னை அழைக்கிறார்கள்!" என்று கூறிய பின்னர் உயிர் விட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பதினெட்டு.

தம் மகனின் உடலை தம் கூடாரத்திட்குக் கொண்டுவந்த ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவனின் முன் மண்டியிட்டு, "யா அல்லாஹ்! என்னிடம் ஒரே ஒரு அலி அக்பர்தாம் இருந்தார். அவரையும் உன்னுடைய பாதையில் நான் தியாகம் செய்து விட்டேன். இன்னும் நூறு அலி அக்பர்கள் எனக்கு மக்களாக இருப்பினும் அவர்களையும் நான் உனது பாதையில் தியாகம் செய்வேன்" என்று கூறிக் கண்ணீர் சிந்தினர். 





நாடுகளை சுற்றிய நபித்தோழர் 

நபித்தோழர் ஒருவர் திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுத நினைத்தார்கள். அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவராயிருந்தார்கள்.

எனினும் அவருக்கு ரகீம், தபராக, மதாஉ ஆகிய மூன்று சொற்களுக்கு பொருள் என்னவென்று தெரியவில்லை. அவற்றின் பொருளை அறிவதற்காக அவர்கள் பலநாடுகளுக்கும் சுற்றித்திரிந்தார்கள். எனினும் அவர்களால் அதற்காக பொருளை அறிந்துக்கொள்ள இயலவில்லை.

பின்னர் மனம் சோர்வடைந்த நிலையில் அவர்கள் ஒரு தெருவின் வழியே சென்றுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டில் ஒரு பெண் தன அடிமையிடம், "அய்னல் மதாஉ" (உணவு சமைக்கும் பாத்திரம்?) என்று கேட்டாள். அதற்கு அவ்வடிமை "ஜாஅர் ரகீமு வ அகதல் மதாஆ வ தபாரகள் ஜிபால" (நாய் வந்து உணவு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மலை மேல் ஓடிவிட்டது) என்று கூறினாள். அது கேட்டு சோர்வடைந்திருந்த நபித்தோழரின் உள்ளம் புத்துணர்ச்சி பெற்றது. மூன்று சொற்களுக்கும் அவர்கள் பொருள் விளங்கி கொண்டார்கள்.

அதன் பின்னரே அவர்கள் திருக்குர்ஆனுக்கு தப்ஸீர் எழுதத் துவங்கினார்கள். திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதுவதில் முழுக்க முழுக்க இறைவனுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

ஆனால் இன்று அரைகுறையாக மார்க்கத்தை கற்ற எல்லோருமே திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும்.







அற்புத துஆ 

ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார்.

அது கேட்ட அவர்கள், "என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, "நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது." என்றார்கள்.

அதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, "அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது" என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்." என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள்.

அது வருமாறு:-

"அல்லாஹும்ம அன்த ரப்பீ
லாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து
வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹுகான வமாலம்
யஷஹ லம்யகுன் வலா ஹவ்ல
வல குவ்வத்த இல்லா பில்லாஹில்
அலிய்யில் அளீம்.
அஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.
வ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க
மின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி
தாபத்தின் அன்த்த ஆகிதுன்
பி நாசியத்திஹா இன்ன ரப்பீ
அலா சிராத்திம் முஸ்தகீம்."







இதய நோய்க்கு நிவாரணம் 
மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். 
ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும் , பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக! பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக! 
பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக! 
இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார். 

இவ்வாறு 
الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد

ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை





தொழுகையும் துன்னூன் மிஸ்ரியும் رضي الله عنه


துன்னூன் மிஸ்ரியிடம் رضي الله عنه ஒருவர் தன் குறையை எடுத்துக் கூறினார்.‘என்ன செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை; காரணம் என்ன என்றும் புரியவில்லை’ என்று பீடிகை போட்ட அந்த மனிதர் தனக்கு எதிரில் அமைதியாக உட்கார்ந்திருந்த ஞானப் பழத்தைச் சில வினாடிகள் பார்த்தார்.‘செய்தியைச் சொல்லுங்கள்’சற்றுப் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த அந்த மனிதர் தொடர்ந்தார்.‘நான் வேளை தவறாமல் தொழுது வருகிறேன். சமீபக் காலத்தில் ஒரு தொழுகையைக் கூட விட்டதாக எனக்கு நினைவிலில்லை. ஆனால் சில நாட்களாக என் தொழுகையில் வெறுக்கத்தக்க மாறுதலை நான் பார்க்கிறேன். தொழ வேண்டிய நேரம் வந்ததும் என் மனதில் ஒருவிதமான சங்கடம் தோன்றுகிறது. மனத்தை அடக்கிக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், தொழுகையின் பகுதிகளில் சிலவற்றை எனக்கே தெரியாமல் நான் விட்டுவிடுகிறேன். சில நேரங்களில் ஒரு ரக்அத் முடிந்ததும் அது இரண்டாம் ரக்அத் என்று தோன்றுகிறது’என்று கூறிய அந்த மனிதர் சற்றுத் தயக்கத்துடன் தன் மனத்திலுள்ள எண்ணத்தைக் கூறி முடித்தார்.‘இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். தொழுகை என்றதும் என் மனதில் ஒருவிதமான வெறுப்புத் தோன்றுகிறது. இந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்த வெறுப்பை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்குக் காரணமும் தெரியவில்லை. பரிகாரமும் புரியவில்லை!’ஞானியின் வினா அமைதியாக வெளி வந்தது. ‘இந்த நிலைமை சில நாட்களாகத்தான் உனக்கு இருக்கிறது என்று கூறினாயல்லவா? முன்பெல்லாம் உனக்குத் தொழுகையில் வெறுப்புத் தோன்றவில்லையா?’‘இல்லை. அப்போதெல்லாம் நான் தொழுகையில் விருப்பத்தைக் கண்டேன். என் மனத்தில் வெறுப்போ அலுப்போ தோன்றியது கிடையாது’‘தொழுகையில் உனக்கு எத்தனை நாட்களாக வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது?’‘தொழுகையில் எனக்கு வெறுப்புத் தோன்றுகிறது என்று சொல்வதற்கே நான் பயப்படுகிறேன். இறைவன் என்னை மன்னிக்க வேண்டும். ஏறக்குறைய 20 நாட்களாக இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்’‘இருபது நாட்களுக்கு முன்னர் ஏதேனும் குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்திருக்கிறதா?’சற்று யோசித்துப் பார்த்துவிட்டு அந்த மனிதர் பதிலளித்தார். ‘அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சென்றமாதம் காய்க்கறிகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஒரு கடை வைத்தேன்’ஞானியின் முகம் பளிச்சிட்டது. ‘தொழுகையில் வெறுப்பு ஏற்படுகிறது என்று சொன்னாயல்லவா? இந்த வெறுப்பினால் தொழுகையை நீ விட்டது உண்டா?’‘உண்டு. இரண்டு அல்லது மூன்று தொழுகைகளை விட்டிருக்கிறேன்’‘தொழுகையை நிறைவேற்றாதபோது அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய்?’‘வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடையை அலங்கரிப்பதில் அக்கறை செலுத்திக் கொண்டிருந்தேன்’‘அந்த அக்கறை இப்போதும் உனக்கு இருக்கிறதா?’‘நிறைய இருக்கிறது. இரவில் கூடக் கடையைப் பற்றிய நினைவு மாறுவதில்லை’‘தொழுது கொண்டிருக்கும்போது இந்த நினைவு உனக்கு ஏற்படுகிறதா?‘ஆம்’ என்று பதில் வந்தது.அந்த ஞானக் கடலின் அறிவுரை தெளிவுரையாக வெளிவந்தது.‘மனிதனுக்கு இறைவன் இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். கையையும் காலையும் கூட இரட்டையாகத்தான் அவன் அளித்திருக்கிறான். ஆனால் எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களைக் கொடுக்கவில்லை. உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உள்ளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கறைகள் ஒரே நேரத்தில் ஆழமாக வேரூன்ற முடியாது. உனக்கு தொழுகையில் வெறுப்பு ஏற்படுவதற்கு, வியாபாரத்தில் உனக்கு இருக்கிற ஆழ்ந்த அக்கறை – ஆசைதான் காரணம். இந்த அக்கறை, தொழுகையில் ஏற்கனவே இருந்த அக்கறையை அழித்து விட்டது. ஏனெனில் நீ பின்னதை விட முன்னதை வலிமைப்படுத்தி விட்டாய். தொழுகையில் வெறுப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரிகிறதா? மீண்டும் உனக்குத் தொழுகையில் வெறுப்பு விருப்பம் ஏற்பட வேண்டுமானால், அதற்கு இரண்டு காரியங்களில் ஒன்றை நீ அவசியம் செய்ய வேண்டும். ஒன்று, நீ தொடங்கியிருக்கும் வியாபாரத்தை விட்டுவிட வேண்டும். அல்லது, வியாபாரத்தை விடத் தொழுகையில் அதிக அக்கறை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்’- ஞானி துன்னூன் மிஸ்ரியின் رضي الله عنه கருத்து, இறை வணக்கத்தில் ஈடுபடுகிற பெரும்பாலோருக்கு நல்வழி காட்டும் என்று எண்ணுகிறேன். வியாபாரம் செய்யக்கூடாது என்பது அவரது கருத்தல்ல. எனக்கும் அந்தக் கருத்து கிடையாது. வர்த்தகத்தை விட வணக்கத்தில் அதிக அக்கறை இருக்க வேண்டும் என்பதே ஞானத்தின் போதனை. எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் இறை வணக்கம் துணை செய்கிறது என்பதை அனுபவத்தில் கண்ட சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், இங்கே இதற்கு மேல் விரிவாக எழுத வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. உணர்ந்து கொண்டவர்களுக்கு உணரப்பட்ட செய்திகளை உணர்த்திக்காட்ட முற்படுவது அர்த்தமில்லாத செயலாகும்.