அல்சர் நோயை தடுக்க வழிகள் | ||
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புல் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம். குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது. தூக்கமின்மை....... தூக்கமின்மை காரணமாக அல்சர் வரக்கூடும். அலுவலகங்களில் ஷிப்ட் முறையில் இரவு நேரங்களில் பணி புரிவது இரவு முழுவதிலும் விருந்துகளில் கலந்து கொண்டு கண் விழிப்பது, நீண்டதூரம் பயணம் செல்வது, தூக்கமின்மை போன்றவை அல்சர் நோய்க்கு வழி வகுக்கும் என பிரிட்டன் மருத்து வர்கள் கூறியுள்ளனர். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும், திசுக்களை வளரச் செய்யும் அமிலங்களும் சிறு குடலில் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் உற்பத்தியாகின்றன. தூக்கமின்மை காரணமாக அல்சர் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகும். டி.எப்.எப்.2 புரோட்டினின் உற்பத்தி தூங்கும்போது 340 மடங்கு அதிகமாகிறது. இது குறைபாடுகளை சரி செய்து அல்சர் வருவதையும் தடுக்கும். அல்லது செரிமானபாதையில் ஆறாமல் இருக்கும் புண்ணையும் ஆறச் செய்யும். குடல்புண்ணை அறிவது எப்படி? காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடு நிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்கமாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது. நெஞ்சு எரிச்சல்...... சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும் என்கிறார்டாக்டர் திருத்தணிகாசலம். அமிலத்தால் இரைப்பை பாதிப்பு........ சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். ரத்தக் கசிவின் காரணமாக அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ் சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார். வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும். இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடிபடுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன. ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது.சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும். காரணங்கள்......... மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அல்சர் நோயாளிகள் அதிகரிப்பு........ சமீப காலமாக பரபரப்பான வாழ்க்கை, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல், காரவகை உணவுகளை சாப்பிடுதல், புகை, மது பழக்கம் போëன்றவற்றால் அல்சர் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 40 சதவீதம் பேரும், தமிழகத்தில் 45 சதவீதம் பேரும் அல்சர் நோயாளிகளாக உள்ளனர். பலர் அல்சரை குணப்படுத்தாமல் கடைசி வரை வயிற்று வலி வேதனையுடன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அல்சரை குணமாக்காவிட்டால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது. செய்ய வேண்டியவை....... குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைïட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண் டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம். | ||
மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்

மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார். மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குண்மடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
-
-
பப்பாளி பழத்தின் மகிமை | ||
வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதோட விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்து. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற ரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. | ||
கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
* மாத விலக்கு தள்ளிப்போகுதல்
* குமட்டல்
* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
* வாசனையைக் கண்டால் நெடி
* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.
மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…
1. மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
2. களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
3. மசக்கை
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.
அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.
இதற்கு காரணம் என்ன?
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
5. மார்பகப் பகுதி மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.
6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
7. வயிறு பெரிதாகுதல்
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.
பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.
அந்த பரிசோதனை முறைகள் :
1. சிறுநீர்ப் பரிசோதனை
இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
2. ஹார்மோன் பரிசோதனை
இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
விஷக்கடிகளுக்கு மருந்தாகும் பூவரசம் பூக்கள் | ||
வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்றுநாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி,மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும் |
மனஅழுத்தத்திற்கு மருந்தாகும் கவா கவா பானம் | ||
டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில் இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பானம் திருமணம், பிறப்பு, மரணம் மற்றும் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பானமாக பருகுகின்றனர்.இந்த கவா கவா பானத்தை குடிப்பவர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்படுகின்றனர். மருத்துவ குணம் 1886 ஆம் ஆண்டில் இருந்து இதன் மருத்துவ குணம் உலகிற்கு தெரியவந்தது.இத்தாவரத்தின் வேர் நரம்பு மண்டல நோய்களை போக்கும், தசை நோவுகளை குணப்படுத்தும். மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரோலியாவில் மருந்திற்காக பயிரிடப்படுகிறது. சதைப்பற்றுடைய தண்டும், இதய வடிவிலான இலைகளையும் கொண்ட இத்தாவரம் என்றும் பசுமையுடன் இருக்கும். இத்தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியும், வேரும் மருத்துவ குணம் உடையவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் கவா கவா தாவரத்தின் வேரில் காணப்படும் கவாலோக்டோன்கள், கருவய்ன், அல்கலாய்டு பிப்பெரிடைன், பைபர் மெதி சிடிசைன், ஆகியவை மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளன. உடல் வலுவேற்றும் வேரில் இருக்கும் வேதிப்பொருட்கள் ஊக்குவியாகவும், வலுவேற்றியாகவும், செயல்பட வைக்கும். இது அதீத படபடப்பு மற்றும் கவலைகளைப் போக்கும். இது வலி போக்குவி. நன்றாக தூக்கத்தை தூண்டும். சிறுநீர்ப்பை கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மனஅழுத்த மருந்து தென் கடல் தீவுகளில் மன அமைதி மற்றும் உணர்ச்சி தூண்டும் பொருளாக கவா கவா மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அளவில் உட்கொள்ளப்படும் போது நன்னிலை உணர்வினை தருகிறது. இதனால் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் கவாலேக்டேக்டோன்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் மைய நரம்பு மண்டல அழுத்தத்தினை குறைப்பதுடன் வலிப்புக்கு எதிராக செயல்படுகின்றன. கவாகவா மருந்து மன அழுத்தத்தை போக்குகிறது. இது மயக்கம் அளிப்பதில்லை. இருப்பினும், தசை இருக்கம் மற்றும் மன கிளர்ச்சி அழுத்தங்களை குணப்படுத்த உதவுகிறது. தோல் வறட்சி நீங்கும் இந்த கவா கவா மருந்தை வாராத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் உட்கொண்டால் மது குடித்து ஈரல் கெட்டுப்போனவர்களுக்கு குணம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள். தோல் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த மருந்து வாய்ப்புண், மற்றும் பல்வலி ஆகியவற்றில் கொப்பளிப்பாகப் பயன்படுகிறது. | ||
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம் | ||
குணங்களை கொண்டுள்ளன. தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது. மூளை வளர்ச்சி உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும். கண்பார்வை தெளிவு வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும். உயர் ரத்த அழுத்தம் வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும். கூந்தல் தைலம் தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும். இருதயநோய் போக்கும் செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும். இருமல் போக்கும் நீர் தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும். | ||
இஸ்லாமிய குடும்பச்சூழல்
இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்"(அபூஹுரைரா(ரலி)
கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" முஸ்லிம்) அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும். "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21).
தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (பைஹகி ).
இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி).
அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை.
உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது? | ||
அவற்றில் சில பலகீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப் பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல் எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செயல்படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவைகள் தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும். இரண்டாவது வகையான எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது லிம்போ டைடஸ் என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள். மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்புசக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும். |
கவர்ச்சியான கண்களைக் கொண்ட சவூதி பெண்கள் பர்தா அணிய வேண்டும்? | ||
சவூதி அரேபியாவில் பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. ஆனால் அவர்கள் கண்கள் தெரியும் வகையில் பர்தா அணிவது உண்டு. காந்தக் கண்களால் மற்றவர்கள் கவனத்தைப் பெண்கள் கவர்வதாகக் கூறி, அதைத் தடுக்கும் வகையில் இனிக் கண்கள் வெளியே தெரியாத வகையில் பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது அந்நாட்டின் நன்னெறி காப்பு மற்றும் தீய எண்ணங்கள் தடுப்புக் குழு. பிக்யா மஸ்ர் என்று இணையதளம் கூறியதாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, பெண்கள் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் கண்கள் தெரியும்படி பர்தா அணியக்கூடாது என்று உத்தரவிடும் உரிமை இந்த குழுவுக்கு உள்ளது என்று நன்னெறிகளைக் காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோத்லப் அல் நபெத் தெரிவித்துள்ளார். சவூதியில் பெண்கள் பொது இடங்களுக்கு பர்தா இல்லாமல் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம், கசையடி போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். நன்னெறிகளை காப்போம், தீய எண்ணங்களைத் தடுப்போம் குழு கடந்த 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சவூதியில் இஸ்லாமியச் சட்டங்கள் மீறப்படாமல் இருக்கிறதா என்று அந்தக் குழு கண்காணித்து வருகிறது. ___ |

தேவையானவை:
உளுந்து = கால் டம்ளர்
அரிசி மாவு = முன்று தேக்கரண்டி
ரவை = ஒரு மேசை கரண்டி
வெங்காயம் = முன்று
பச்சமிளகாய் = ஒன்று
கொத்துமல்லி தழை = சிறிது
நெய் + எண்ணை = சுட தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நருக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்து அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சிறிது சேர்த்து அடைகளாக வார்க்கவும்
மாதர்களின் மகிமை
இல்லற வாழ்வில் இறைத்தூதர் நம் நபிக்கு நாயன் வழங்கிய நன்மதிப்புகளில் ஒன்று! திருமணம் பற்றியதாகும். ஒரு பெண் தம்மை தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு மனைவியாக்க முன்வந்தால் திரு நபியவர்களும் அப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால் மஹர் இல்லாமலும் சாட்சிகள் இல்லாமலும் மணந்து கொள்ளலாம்.
நபியே! இது உங்களுக்கு உரித்துடைச் சட்டமாகும். உம்மத்துகளில் விசுவாசிகள் எவருக்கும் இவ்வுரிமை கிடையாது. (33: 50)
நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு நான்கு மனைவியரிலும் பார்க்க அதிகம் திருமணம் செய்யும் உரிமை கொண்டிருந்தும் சமகாலத்தில் ஒன்பது மனைவியரைக் கொண்டிருந்தார்கள். இது அல்லாஹ் அன்னவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்பாகும். ஏனையோர் இவ்வாறு திருமணம் செய்தல் ஹராம் எனும் விலக்காகும். தானாக முன்வந்து தம்மை மனைவியாக்குமாறு தம்மை அண்ணலாருக்கு அர்ப்பணித்த உம்மஹாதுல் முஃமினீன்களுள் அன்னையர்களான மைமூனா, கவ்லா, உம்மு ஷரிக், ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹுன்ன) அடங்குவர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மனைவியர்களின் தனிப்பெரும் சிறப்பினைக் கொண்டிருந்தனர். அல்- குர்ஆன் அன்னவர்களை சிறப்பிக்கையில் அனைவருக்கும் அன்னவர்கள் அன்னையர்கள் எனச் சிறப்பிக்கின்றது. எப்பென்னும் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கே தாயாவதாயிருக்க அனைத்து உம்மத்தினருக்கும் அவர்கள் அன்னையர்களாக மதிக்கப்படுவது எத்துனை சிறப்புரியது எனலாம். மாநபியின் மறைவின் பின் அவ்வன்னையரை யாரும் மறுமணம் புரிதல் கூடாது என அல்லாஹ் அவர்களைப் புனிதப்படுத்திருப்பது ஒன்றே அன்னவர்கள் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும்.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்! அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்து அதிலிருந்து அவரின் துணைவியரைப் படைத்து. பின் அவ்விருவரிலிருந்தே ஏராளமான ஆண், பெண்னைப் படைத்தான். அவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இன்னும் இரத்த பந்தத்துடன் அன்பாக நடவுங்கள். நிச்சயம் அவன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
நபிமாரைப் பின்பற்றிய அனைவரும் புடைசூழ நாளை மஹ்ஷரில் கானப்படுகையில் என் சமூகம் அனைவரில் அதிகமாய்க் காணப்படுவான் வேண்டி நீங்கள் திருமணம் செய்து அதிக குழந்தைகள் பெற்றெடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளனர். நாளை மறுமையில் இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கைப் பெருக்கைக்காட்டி அன்னவர் பெருமையை ஒங்கக்காரணியாய் இருப்பவள் பெண்ணே என்றால் மிகையாகாது.
நான் அதிகம் யாரை நேசிக்க வேண்டும் என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வினவ, உன் தாய் என மூன்று முறை கூறினார்கள். நான்காம் முறை உன் தந்தை என்றார்கள், என்றால் அத்தாய் எவ்வாறு கௌரவிக்கப்பட்டிருக்கிறாள் என நான் சொல்ல வேண்டுமா?
ஒரு சமூக மேம்பாட்டின் தொண்டர்களை உருவாக்கும் பெருமையை ஒரு தாய்தான் முதல் ஆசானாய் இருந்து நடாத்துகிறாள் என்றால், அத்தாயை என்னவென்றுரைப்பது? புனித இஸ்லாமிய வரலாற்றில் கூட பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ஸுமையா நாயகியின் வீரத்தியாகம் புனித தீனுக்காய் முதல் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வரலாறு பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதி சாசன உரையில் கூட பெண்கள் விவாகரத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறும் அன்னவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள வரம்புக்குள் வாழ்வளித்துக் காக்குமாறும் எச்சரித்திருப்பது நம் கவனத்திற்குரிய விடயமாகும்.
சாபத்திற்கும், சாவுக்கும், கோபத்திற்கும் உள்ளான ஆயிரத்து நானுறை மு தாண்டியகலாப் பெண்ணினம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் வாழ்வளிக்கப்பட்டு வாழ்த்தப்பட்ட வரலாறு என்றும் நிலையானதே! ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறைச்சட்டம் போல் பெண்களுக்கும் எல்லைக் கோடிட்ட இஸ்லாம், அவரவர் இயல்பு நிலைப்படைப்புக்கும் பக்குவத்திற்கும் கற்புக்கும் உத்தரவாதமளிக்கும் விதிமுறைகளை விதித்து வழிநடாத்துகின்றது.
ஆக, ஈமானியப் பெண் சமூகத்தின் கண். இஸ்லாமிய ஒளியின் துணையோடு உலகைக் கவனித்து எழுச்சிமிக்க உன்னத சமூகத்தை ஞானமெனும் மெய்யமுதூட்டி உரமிக்கவோர் இளந்தலைமுரையினை தான் பெற்ற தீனுக்கும் அதன் உயர்வுக்கும் தன் ஆறும செல்வங்களை அர்ப்பணிக்கும் பெறுமதிமிக்க அன்புத்தாய் இனத்தை விட இச்சமூகம் எதைத்தான் தன் பேறாய்ப் பெற முடியும்!
ஷரீஆவெனும் நல்லொழுக்க மேம்பாட்டு வழி முறையினை அல்லாஹ் தன் நபி மூலம் மக்களுக்கு விதித்த வேலை தன் நபிக்கு அவனே பல விதிகளை மேலதிகமாகும், சிலவற்றை மேலதிக விளக்காகவும் மற்றும் சிலதை அனுமதித்துமுள்ளான். இது அவனால் அவர்களின் இயல்புக்கும், உடல் நிலைக்கும், மனப்பக்குவத்திற்கும், தார்மீகத்தன்மைக்கும், சமநிலைப் பேணலுக்கும் வழங்கப்பட்டதொன்று என்பதனால் அதன் வெளி நிலைகளை மாத்திரம் நாம் கானமுடியுமேயன்றி அந்தரங்க நோக்கத்தை அணுகும் திறமையும் உரிமையும் எமக்கில்லை. ஷரீஆவின் நிழலில் ஒரு மனைவியை ஒழுங்காகப் பேணுவதில் மானிடன் எதிர்கொள்ளும் தவறுகள் அனந்தம். இந்நிலையில் மானிட வழிக்காட்டி மன்னர் நன்நபி தம் இறுதி நேரத்தில் கூட ஒன்பது நம் பிராட்டிமாரை திருப்திமிக்க அன்னையர்களாய் விட்டுச் சென்றார்கள் என்றால் அண்ணலாரின் தலை சிறந்த முன்மஅத்திரி தயக்கம் காட்டும் எம்மவருக்கு எடுகோள் அல்லவா!
அல்லாஹ்வின் அனுமதி வழியில் பெண்ணைப் பொறுப்பேற்கும் இருவர் அவர்கள் சலனமற்ற சந்தோஷ நல்லற வாழ்வை முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்ளல் வேண்டியிருக்க, அவர்களைத் தம் ஜீவனோபாயத்திரட்டலுக்குப் பயன்படுத்தல் எங்ஙனம் ஏற்புடையதாகும். அதன் பின் விளைவுகள் பற்றிய கவலை யாருக்குண்டு! சிந்திக்க வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்வில் ஒரு சிறுதுளி கூட எம் சிந்தனைக்குரியதே!
இடுப்பு பிடிப்பு
இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும். வாய்ப்புண்
1. சுமார் இருபது மணத்தக்காளி இலையை காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு அத்துடன் ஓரு டம்ளர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.2. அகத்திக் கீரையுடன் தேங்காய், பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதை உணவுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப் புனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன் கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பேன் தொல்லை
3. பாகற்காயிலிருந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
கர்ப்பிணிகளுக்கு
1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும். 2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும்.
மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்:
"பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்"
(புகாரி, முஸ்லிம்).
"நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (அபூதாவூது)
பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் காலணிகளையும் தங்கள் ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். தங்கள் ஆடையை, தாமே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள்" (ஆயிஷா(ரலி) -அஹ்மது).
இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-
உளுந்தம்பருப்பு - 100 கிராம், கடலை பருப்பு - 100 கிராம்,
காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது), பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது, மிளகாய் - 2, சீரகம் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது),
எண்ணெய் - 1/2 லிட்டர், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்)
3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
தாய்ப்பால் சுரக்க
3. சுத்தமான திடம் கோரோசனையைப் பாலில் கலக்கி காய்ச்சிய பின் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெரும்.
4. முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
கண் உறுத்தல்
5. குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும்.
மாதர்களின் மகிமை
இல்லற வாழ்வில் இறைத்தூதர் நம் நபிக்கு நாயன் வழங்கிய நன்மதிப்புகளில் ஒன்று! திருமணம் பற்றியதாகும். ஒரு பெண் தம்மை தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு மனைவியாக்க முன்வந்தால் திரு நபியவர்களும் அப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால் மஹர் இல்லாமலும் சாட்சிகள் இல்லாமலும் மணந்து கொள்ளலாம்.
நபியே! இது உங்களுக்கு உரித்துடைச் சட்டமாகும். உம்மத்துகளில் விசுவாசிகள் எவருக்கும் இவ்வுரிமை கிடையாது. (33: 50)
நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு நான்கு மனைவியரிலும் பார்க்க அதிகம் திருமணம் செய்யும் உரிமை கொண்டிருந்தும் சமகாலத்தில் ஒன்பது மனைவியரைக் கொண்டிருந்தார்கள். இது அல்லாஹ் அன்னவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்பாகும். ஏனையோர் இவ்வாறு திருமணம் செய்தல் ஹராம் எனும் விலக்காகும். தானாக முன்வந்து தம்மை மனைவியாக்குமாறு தம்மை அண்ணலாருக்கு அர்ப்பணித்த உம்மஹாதுல் முஃமினீன்களுள் அன்னையர்களான மைமூனா, கவ்லா, உம்மு ஷரிக், ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹுன்ன) அடங்குவர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மனைவியர்களின் தனிப்பெரும் சிறப்பினைக் கொண்டிருந்தனர். அல்- குர்ஆன் அன்னவர்களை சிறப்பிக்கையில் அனைவருக்கும் அன்னவர்கள் அன்னையர்கள் எனச் சிறப்பிக்கின்றது. எப்பென்னும் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கே தாயாவதாயிருக்க அனைத்து உம்மத்தினருக்கும் அவர்கள் அன்னையர்களாக மதிக்கப்படுவது எத்துனை சிறப்புரியது எனலாம். மாநபியின் மறைவின் பின் அவ்வன்னையரை யாரும் மறுமணம் புரிதல் கூடாது என அல்லாஹ் அவர்களைப் புனிதப்படுத்திருப்பது ஒன்றே அன்னவர்கள் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும்.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்! அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்து அதிலிருந்து அவரின் துணைவியரைப் படைத்து. பின் அவ்விருவரிலிருந்தே ஏராளமான ஆண், பெண்னைப் படைத்தான். அவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இன்னும் இரத்த பந்தத்துடன் அன்பாக நடவுங்கள். நிச்சயம் அவன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
நபிமாரைப் பின்பற்றிய அனைவரும் புடைசூழ நாளை மஹ்ஷரில் கானப்படுகையில் என் சமூகம் அனைவரில் அதிகமாய்க் காணப்படுவான் வேண்டி நீங்கள் திருமணம் செய்து அதிக குழந்தைகள் பெற்றெடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளனர். நாளை மறுமையில் இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கைப் பெருக்கைக்காட்டி அன்னவர் பெருமையை ஒங்கக்காரணியாய் இருப்பவள் பெண்ணே என்றால் மிகையாகாது.
நான் அதிகம் யாரை நேசிக்க வேண்டும் என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வினவ, உன் தாய் என மூன்று முறை கூறினார்கள். நான்காம் முறை உன் தந்தை என்றார்கள், என்றால் அத்தாய் எவ்வாறு கௌரவிக்கப்பட்டிருக்கிறாள் என நான் சொல்ல வேண்டுமா?
ஒரு சமூக மேம்பாட்டின் தொண்டர்களை உருவாக்கும் பெருமையை ஒரு தாய்தான் முதல் ஆசானாய் இருந்து நடாத்துகிறாள் என்றால், அத்தாயை என்னவென்றுரைப்பது? புனித இஸ்லாமிய வரலாற்றில் கூட பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ஸுமையா நாயகியின் வீரத்தியாகம் புனித தீனுக்காய் முதல் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வரலாறு பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதி சாசன உரையில் கூட பெண்கள் விவாகரத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறும் அன்னவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள வரம்புக்குள் வாழ்வளித்துக் காக்குமாறும் எச்சரித்திருப்பது நம் கவனத்திற்குரிய விடயமாகும்.
சாபத்திற்கும், சாவுக்கும், கோபத்திற்கும் உள்ளான ஆயிரத்து நானுறை மு தாண்டியகலாப் பெண்ணினம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் வாழ்வளிக்கப்பட்டு வாழ்த்தப்பட்ட வரலாறு என்றும் நிலையானதே! ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறைச்சட்டம் போல் பெண்களுக்கும் எல்லைக் கோடிட்ட இஸ்லாம், அவரவர் இயல்பு நிலைப்படைப்புக்கும் பக்குவத்திற்கும் கற்புக்கும் உத்தரவாதமளிக்கும் விதிமுறைகளை விதித்து வழிநடாத்துகின்றது.
ஆக, ஈமானியப் பெண் சமூகத்தின் கண். இஸ்லாமிய ஒளியின் துணையோடு உலகைக் கவனித்து எழுச்சிமிக்க உன்னத சமூகத்தை ஞானமெனும் மெய்யமுதூட்டி உரமிக்கவோர் இளந்தலைமுரையினை தான் பெற்ற தீனுக்கும் அதன் உயர்வுக்கும் தன் ஆறும செல்வங்களை அர்ப்பணிக்கும் பெறுமதிமிக்க அன்புத்தாய் இனத்தை விட இச்சமூகம் எதைத்தான் தன் பேறாய்ப் பெற முடியும்!
ஷரீஆவெனும் நல்லொழுக்க மேம்பாட்டு வழி முறையினை அல்லாஹ் தன் நபி மூலம் மக்களுக்கு விதித்த வேலை தன் நபிக்கு அவனே பல விதிகளை மேலதிகமாகும், சிலவற்றை மேலதிக விளக்காகவும் மற்றும் சிலதை அனுமதித்துமுள்ளான். இது அவனால் அவர்களின் இயல்புக்கும், உடல் நிலைக்கும், மனப்பக்குவத்திற்கும், தார்மீகத்தன்மைக்கும், சமநிலைப் பேணலுக்கும் வழங்கப்பட்டதொன்று என்பதனால் அதன் வெளி நிலைகளை மாத்திரம் நாம் கானமுடியுமேயன்றி அந்தரங்க நோக்கத்தை அணுகும் திறமையும் உரிமையும் எமக்கில்லை. ஷரீஆவின் நிழலில் ஒரு மனைவியை ஒழுங்காகப் பேணுவதில் மானிடன் எதிர்கொள்ளும் தவறுகள் அனந்தம். இந்நிலையில் மானிட வழிக்காட்டி மன்னர் நன்நபி தம் இறுதி நேரத்தில் கூட ஒன்பது நம் பிராட்டிமாரை திருப்திமிக்க அன்னையர்களாய் விட்டுச் சென்றார்கள் என்றால் அண்ணலாரின் தலை சிறந்த முன்மஅத்திரி தயக்கம் காட்டும் எம்மவருக்கு எடுகோள் அல்லவா!
அல்லாஹ்வின் அனுமதி வழியில் பெண்ணைப் பொறுப்பேற்கும் இருவர் அவர்கள் சலனமற்ற சந்தோஷ நல்லற வாழ்வை முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்ளல் வேண்டியிருக்க, அவர்களைத் தம் ஜீவனோபாயத்திரட்டலுக்குப் பயன்படுத்தல் எங்ஙனம் ஏற்புடையதாகும். அதன் பின் விளைவுகள் பற்றிய கவலை யாருக்குண்டு! சிந்திக்க வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்வில் ஒரு சிறுதுளி கூட எம் சிந்தனைக்குரியதே!
வயிற்றுப் போக்கு
வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும். பித்த வெடிப்பு
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும். தலைவலி
இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம். இஸ்லாமிய குடும்பச்சூழல்
இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்"(அபூஹுரைரா(ரலி)
கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" முஸ்லிம்) அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும். "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21).
தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (பைஹகி ).
இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி).
அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை.
தாய்ப்பால்
1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.
எயிட்ஸின் எதிரி பர்தாவே!
புனித தீனுல் இஸ்லாம், நல்லதோர் குடும்பம் சின்னாபின்னப்பட்டுவிடாது அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. எனவே, அக்குடும்பத்தில் மனோ இச்சை எனும் வைரஸ் தொற்றி அதன் இயற்கைச் சூழலைக் கேடுபடுத்திடாமல் மக்கள் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குனங்களென்ற உதவிவாய்ந்த தூண்களால் சுவர் எழுப்பியுள்ளது. மேலும், புனித இஸ்லாம் மார்க்கம், அனாச்சாரங்களின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியவற்றைச் தடுப்பதற்காக திரைகளை எற்படுத்துயுள்ளது. ஆணும், பெண்ணும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் இழிவிலிருந்து அவளின் தன்மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மேலும், குழப்பவாதிகள், தீய எண்ணம கொண்டவர்களின் தீங்குகளை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும், விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும், பெண்ணின் கண்ணியத்தையும் பத்தினித்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்கமாக்கியுள்ளான்.
அல் – குர்ஆனில் வல்ல நாயன், “(நபியே!) முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்களின் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும், அவற்றில் வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளால் தங்களின் முன்பகுதியை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்!” (24:31)
எனப் பறைசாற்றுகின்றான். குழப்பங்கள் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இக்காலத்தை விட வேறு எக்காலத்தில் அச்சம் அதிகமாக இருக்க முடியும்! காமுகர் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் நிரம்பியும் நல்லவர்கள் அறிதாகியும் விட்டனர். இஸ்லாம் பெண்களை அந்நிய ஆடவர்களுடன் கலந்துரவாடுவதை தடுத்திருப்பது போன்று மேற் கூறியவை அனைத்தும் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகும். இஸ்லாம் பாதிகாப்பின் மீதும், குழப்பத்தையும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அடைத்துவிடுவதின் மீதும் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதிலும் அந்நிய ஆடவர்களுடன் கலந்துரையாடுவதிலும், அவளின் வதனத்தைத் திறந்து செல்வதிலும், மனோ இச்சைகளைக் கிளறிவிடக்கூடியவைகளும், பாவத்திற்குக் காரணமான செயல்களை இலகுபடுத்துவதும், அவைகளைச் செய்யக் கூடியவர்களுக்கு அவற்றை இலகுவாக்கக்கூடிய வைகளாய் இருக்கின்றன. மேலும், மறைக்கப்பட வேண்டிய ஒளறத் திறக்கப்படுவதாலேயே எதிர்பால் கவர்ச்சி ஏற்படுகின்றது.
அதனால்தான் இறைவன் தனது அருள்மறையாம் குர்ஆனில்: “நபியுடைய மனைவியரே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருக்காதீர்கள்” (33: 53)
என வெளிச்சம் போட்டுகாடுகின்றான்.
ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவரில்லாதபோது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்த தேவைகளுக்காக மார்க்க வரம்புகளைக் பெண் தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை. ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை தடுக்கப்பட்டிருப்பது அவளது குடும்பத்தையும் நற்குணங்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் ஆன்மாக்களையும் நற்குணங்களையும் பாழாக்குவத்தின் மீது பேராசை உள்ளவனாக இருக்கிறான்.
“ஆண், பெண் இருவரும் தனித்திருக்கையில் மூன்றாவதாய் ஷைத்தான் இருக்கிறான்.” எனும் மணிமொழியை நினைவிற் கொள்க! பர்தா அணிவது அவசியம் தானா? பெண்ணை முக்காடிட்டு வீட்டினுள் மறைத்து வைப்பது தகுமா? வளர்ந்திருக்கும் விஞ்ஞான உலகில் நடமாட தடை விதிக்கலாமா? இது என்ன நியாயம்? திரையிட்டு சிறை வைக்கும் ஆடவர் ஆணவம் அடங்காதா? ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதியா? ஆடவர் உள்ளத்தை கவரத்தானே இறைவன் படைத்தான்? என்றெல்லாம் கூறி பர்தா கூடாது என்றே பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. நெருப்பும் பஞ்சும் நெருங்கினாலே அபாயம்! என்பது போல் ஓர் ஆணும அந்நிய பெண்ணும் பார்த்தாலே பெரும் ஆபத்து! பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். எந்த ஆண்மகனும் நாசமடைவது திண்ணம்! பர்தாவுக்குள் பதுங்கியிருக்க வேண்டிய பாவை பகிரங்கமாக வெளிவந்தால் அதுவும் நறுமணம் பூசி, ஆடை அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வந்தால் ஆண்களின் சலசலப்புத்திக்கு நல்ல தீனி படைத்தவளாக மாறிவிடுவாள். சீ.... ஒழுக்கக்கேடு சமூகத்தையே செல்லரித்துவிடும்!
பள்ளி முதல் கல்லூரி வரையிலும், அலுவலகங்களிலும் ஆண், பெண் பாகுபாடு இன்றி நெருங்கிப் பழகுவதால், பெண்களிடம் இயற்கையிலேயே இருக்க வேண்டிய நாணமும், நளினமும் சிதைந்து சீரழிந்து விடுகிறது. அத்தகையவர்களின் பெண்மை மரத்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் அவர்களது மணவாழ்வு மணமற்று, மகிழ்வற்று விவாகரத்து வரை போய்விடுகிறது. ஆணும், பெண்ணும் கலந்துரையாடிப் பழகும் தினசரிப் பழக்கமுள்ளவளின் கற்பு அனலிடை மெழுகாய் அழிந்துவிடும் என்பது நிச்சயம். ஏனெனில், ஓர் ஆணும், பெண்ணும் சந்தித்து கண் மூலமாகப் பெரும் இன்பம் காமத்தில் பாதி அல்ல, அதனிலும் பெரிது! என்பது வெள்ளிடைமலை. ஷைத்தானின் அம்பே பார்வையாகும்!
பாத்திமா மாலை
விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த
அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா
தங்கு புகழ் அன்னையர்க்கும் தங்கமான தங்கையர்க்கும்
சங்கமான மங்கையர்க்கும் சங்கையான பாத்திமா
பெண்களுக்குக் கண்மணியாய்ப் பெரியவர்க்கு விண்மணியாய்
பண்பிருக்கும் நன்மணியாய் பாருயர்த்தும் பாத்திமா
அன்பு காஸிம் உம்மு குல்தூம் அப்துல்லா ருகையா ஜைனப்
இன்ப தாஹிருடன் பிறந்த இன்னமுதே பாத்திமா
இன்ஜமாதுல் ஆகிர் மாதம் இருபது நாள் சென்ற பின்னர்
மென் கதீஜா வயிற்றுதித்த மேன்மை சித்தி பாத்திமா
செங்கதிரோன் பொற்குழம்பைச் சிந்தவந்த வெள்ளி காலை
மங்களமாய் வந்துதித்த மாமணியே பாத்திமா
அருளிருக்கும் பொருளிருக்கும் அகன்றிருக்கும் பாரிடத்தின்
கருவிருக்கும் திருநபிக்குக் கனிவளிக்கும் பாத்திமா
ஓடியாடிப் பாட வேண்டும் ஓட்டிளமைப் போதிறையை
நாடியோடித் தனித்திருந்த நற்கொடியே பாத்திமா
பிஞ்சு போலும் அஞ்சதனில் பிரியமான அன்னையாகும்
துஞ்சவிறையைத் தஞ்சமானீர் தூய்மையார்ந்த பாத்திமா
கருணையாரும் பெருநபியின் காலடியைப் பள்ளியாக்கி
பெருங் குணத்தின் பயிற்சியெல்லாம் பெற்ற பதூல் பாத்திமா
வறுமை நாணம் நன்றி தானம் மனவடக்கம் இறையுணர்வு
பொறுமையாதி அணி சிறக்கும் புகழொளியே பாத்திமா
புவியளிப்போர் பணிய வந்த புனிதனாரின் புதல்வியாகிக்
கவியளிக்கும் எளிய வாழ்வால் கவினடைந்தீர் பாத்திமா
மாசிலாலும் மியல் பறிந்து மணல் விழைந்த மாண்பலியார்
ஈசனோடு பேசியேற்ற இன்பரிசே பாத்திமா
கனிசிறக்கும் வேந்தரெல்லாம் கணவராகக் காத்திருந்தும்
எளியரான அலிப்புலியை ஏற்று வந்தீர் பாத்திமா
பெருநபியின் புதல்வியாகி பேரறிஞர் துணைவியாகி
பெருமை சான்றோ ரன்னையாகும் பேறு பெற்றீர் பாத்திமா
மருள் பெருக்கி இருள் வளர்க்கும் மாயவாழ்வின் தன்மையெல்லாம்
அருள் பெருக்கும் அரிய வாழ்வால் அடர்த்து வென்றீர் பாத்திமா
கார் சுமக்கும் திருநபியின் கவின் சுமக்கும் புதல்வியாய் தண்
ணீர் சுமந்த வடு சுமக்கும் நேர்மை பீவி பாத்திமா
கை சிவக்க மாவரைத்தும் கண்சிவக்க அடுப்பெரித்தும்
மெய்வியர்க்க வீட்டு வேலை மேவுமெங்கள் பாத்திமா
அருளிறையைக் காலை நேரம் அன்புடனே வணங்குவோரும்
திருகை சுற்றும் அரவமுற்றுத் திகைப்படைந்தார் பாத்திமா
மண்ணரரசர் உடையுணவில் மாளிகையில் மகிழ்ந்திருக்க
விண்ணரசா யெளிமையேற்று வியப்பளிப்பீர் பாத்திமா
கடுங்குளிரால் நடுங்குமெழை கவலை போக்க மணவுடையைக்
கொடையளித்து பழையவாடை கொண்டு நின்றீர் பாத்திமா
பசி தணிக்க கிடைத்த ரொட்டி பரிதவிக்க வந்த வேளை
புசிப்பதற்கு கொடுத்து விட்டு புகழடைந்தீர் பாத்திமா
தொழுகைப்பாயி லன்றித் தூங்கும் தலையணையில் துளிர்த்திடாமல்
அழுத கண்ணீர் இறைவனுக்கே அர்ப்பணித்தீர் பாத்திமா
உரை சிறக்கும் அண்ணலாரின் உளம் வருந்த ஏதுவான
திரைகடகம் நீக்கிவிட்ட தீன் முழங்கும் பாத்திமா
வீட்டலுவல் பார்ப்பதற்கோர் வேலையாளை கேட்டதற்கு
நாட்டையாளும் நல்ல தந்தை நாட்டமற்றார் பாத்திமா
அருமையான ஈது நாளில் ஆடை வேண்டும் புதல்வருக்காய்
உருகி நின்றே இறையிடத்தில் உளந்திறந்தீர் பாத்திமா
நல்லசெந்தே னன்ன மெய்க்கு நன்மையூட்டும் நல்லுரைகள்
பல்லவையோர் புகழுமாறு பகர்ந்த பீவி பாத்திமா
புனிதமான பூவையர்க்குப் பொலிவளித்து வாடுகின்ற
வனிதையர்க்கு வாழ்வளிக்க வந்ததேனே பாத்திமா
மாண்பிறப்பின் பயனளிக்கும் மாநபிக்குக் காவலாகி
மாண்பளித்த அபூதாலிப் மருகியாகும் பாத்திமா
நீதி வாழ்த்த நேர்மை காத்து நீணிலத்தை ஆட்சி செய்த
மாதிரங்கள் போற்றுமுமர் மாண்பறிந்த பாத்திமா
கோவுரைக்கும் திருமறையைக் கோத்தளித்துச் சீர் மிகுந்த
கோவையாக்கும் நல்லுதமான் கொழுந்தியாகும் பாத்திமா
பெருமையான வீரருக்குப் பேரணியாம் அலி தமக்கே
ஒருமையான துணைவியாகும் உரிமையான பாத்திமா
வையகத்தி லிசைப்பரப்பி வானகத்தைச் சென்றடைந்த
சையிதான பேர்களுக்குச் சிறப்பளிக்கும் பாத்திமா
பூவுறங்கப் புள்ளுறங்கப் புவனமெல்லாம் ஆழ்ந்துறங்க
நாவுறங்கா திருந்திறையின் நாமமோதும் பாத்திமா
வேத நபி தூதுரைகள் வெற்றி காண அருள் பொழிந்த
நாதனொளி பெற்றுயர்ந்த நாயகியே பாத்திமா
தேன்பொழியும் பெண்ணினத்தார் தேய்வகற்றும் பொன்னுரைகள்
வான்மழையாய்ப் பொழிந்துதவி வளங்கொழிக்கும் பாத்திமா
சொற்களிலும் செயல்களிலும் சோர்வுகாணா தெந்நாளும்
கற்புயர்வும் நற்குணமும் காத்துவந்தீர் பாத்திமா
தந்தையார் தம் தொழுகை வேளை தருக்குடைய வன்பகைசெய்
சிந்தையற்ற செயல்களுக்காய் சிந்தை நொந்தீர் பாத்திமா
கோதுமையை கையரைக்க கோவுரையை நாவுரைக்க
போதுமென்ற பொன்மனத்தால் பொலிவடைந்தீர் பாத்திமா
செங்குரதி பொங்கிவர செருக்களத்தில் பல்லிழந்த
தங்கு புகழ் தந்தையர்க்காய் தளர்ந்து விட்டீர் பாத்திமா
போர் முகத்தில் வாய்மை நாட்டிப் புண்ணடைந்த வீரர் தம்மைப்
பார்வையிட்டுப் பணிவிடைகள் பரிந்து செய்தீர் பாத்திமா
அருமையான அலிப்புலியும் அன்புருவாம் ஹஸன் ஹுஸைனும்
உருகக் கண்டும் உலக வாழ்வை உதறி விட்டீர் பாத்திமா
விண்ணிடந்தில் அண்ணல் நபி வீற்றிருத்தல் காணவோதான்
மண்ணகத்தை விரைவில் நீந்து மறைந்து விட்டீர் பாத்திமா
மாண்ரமலான் மாதமுள்ள வான் சிறப்பைக் காண்பதற்கோ
ஆண்டிருபத் தெட்டினுள்ளே அவனி நீத்தீர் பாத்திமா
வஞ்சகர்கள் நஞ்சளிக்க வாய்மையான நல் ஹஸனார்
துஞ்சு காட்சி முன்னுணர்ந்தோ துஞ்சி விட்டீர் பாத்திமா
கண்ணுஸைனும் காசிமாரும் கர்பலாவில் பெறவிருந்த
விண்பரிசை முன்னறிந்தோ விண்ணடைந்தீர் பாத்திமா
காலைப் போதே குளித்து வந்து கடமையாற்றிக் கபனணிந்து
மாலைப் போதே மவுத்துமானீர் மாண்பொளிரும் பாத்திமா
ஒப்பில்லாத தந்தையர் பால் ஓங்குமன்பால் மறைந்த பின்பும்
தப்பிடாமல் தொடர்ந்து செல்லும் தன்மை பெற்றீர் பாத்திமா
நேசமிக்க ஆசியா நன் நெறியினின்ற மறியம்மா
ஆசி கூற ஆண்டகையை அடைந்த பீவி பாத்திமா
இறையிடத்தி லிருந்து நாமம் இவ்வுலகி லுடம்பெடுத்தோம்
மறையும்போது அவனிடத்தே மகிழ்ந்து செல்வோம் பாத்திமா
விண்ணவர்க்குத் தண்ணொளியாம் மண்ணவர்க்குக் கண்ணொளியாம்
எண்ணுவோர்க்குப் பண்ணளிக்கும் இன்னொளியே பாத்திமா
என்றுமெந்தன் சிந்தை தன்னை ஈர்த்து நிற்கும் விண்மலரென்
றன்றுநம்மைப் பிரிந்த நாதர் அக நெகிழ்ந்தார் பாத்திமா
தேன் பொழியும் பேருரைகள் தெவிட்டிடாமல் ஈந்து நிற்கும்
வான் புகழும் வள்ளலாரின் வடிவமான பாத்திமா
அன்றுமின்றும் என்றுமொன்றும் அரிய வாழ்வை ஆய்வதற்கு
நின்றிருப்போர் மன்றிலென்றும் நின்றிலங்கும் பாத்திமா
கற்பரசே கனிவரசே கவிதையூறும் மாதரசே
பொற்பரசே பொறையரசே புகழரசே பாத்திமா
மணவிளக்கே மணிவிளக்கே மன விளக்கே மனை விளக்கே
குண விளக்கே குலவிளக்கே குடிவிளக்கே பாத்திமா
நல்ல முத்தே நங்கை முத்தே நல்லறிஞர் செல்வமுத்தே
இல்லறத்தின் இன்பமுத்தே இனிய முத்தே பாத்திமா
இறையுணர்வின் நிறையுருவே இறுதி நபி யின்னுருவே
மறையுரையின் நெறியுருவே மறுவிலாத பாத்திமா
செருக்கொழித்த மருக் கொழுந்தே செம்மையுண்மை சேர் கொழுந்தே
அருட்கொழுந்தே திருக் கொழுந்தே அருங்கொழுந்தே பாத்திமா
கோங்கலரும் பூங்கொடியே குரைஷியரின் குலக் கொடியே
ஓங்கு புகழ் ஒரு கொடியே ஓண்கொடியே பாத்திமா
உயர்சுடரே உயிர்ச்சுடரே ஊனமில்லா ஒளிச் சுடரே
அயர்வகற்றும் மணிச் சுடரே அருட்சுடரே பாத்திமா
நோயகற்ற நோன்பிருந்து நோவகற்றும் நாயகியே
தாய்மையொளிர் தையலர்க்குத் தாயகியே பாத்திமா
வையகத்தின் வான்மதியே வானகத்தின் பான்மதியே
தையலர்க்குத் தண்மதியே தங்கமான பாத்திமா
அன்பு வாழ்வே பண்பு வாழ்வே அரிய வாழ்வே பெரிய வாழ்வே
துன்ப வாழ்வில் இன்ப வாழ்வைத் துலக்க வந்தீர் பாத்திமா
விண்ணினின்று மண்ணிலுற்ற வியப்பளிக்கும் மாசிலாத
தண்மதியாம் போன்றிலங்கும் தகைமையாரும் பாத்திமா
நாவலரும் காவலரும் நாவலோங்கும் பாவலரும்
ஆவலோடு போற்றமாதர் ஆவியானீர் பாத்திமா
மாநிலத்தின் மாரதமாம் மாபெரிய பாரதத்தில்
மாநிலத்தோர் நாரதத்தில் மாண்பொளிரும் பாத்திமா
பாரகத்தின் ஊரகத்தைப் பேரகத்தோர் ஏரகத்தைச்
சீரகத்தோர் நேரகத்தைச் சிவிகையாக்கும் பாத்திமா
வரட்சியோட்டும் வான்முகிலே வளப்பமூட்டும் கார் முகிலே
திரட்சியாக நன்மை சேர்க்கும் திருமுகிலே பாத்திமா
உம்பரேத்தும் அம்புயமே உண்மை நன்மை உறைவிடமே
செம்பொன் கோடி ஈடிலாத செஞ்சொலூறும் பாத்திமா
மதி விளக்கும் மர்ளியாவாம் மாண்பளிக்கும் தாஹிராவாம்
பதி சிறக்கும் நல் ஜஹ்ரா பண்பு காத்தூன் பாத்திமா
பூமலரும் புகழ் மலரும் பொன் மலரின் நன்மலராம்
பாமலரும் நாமலரும் பரவ நிற்கும் பாத்திமா
பள்ளரிய புகழையெல்லாம் பாவெடுத்து கூறவந்த
அன்படியேன் பணியிதுவே அன்பளிப்பே பாத்திமா
மசால் தோசை

புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன், உப்பு,
எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு
செய்முறை:
அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம்
புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும்.
பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம். இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.
திருமணம் தரும் நறுமணம்!
“வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்” என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது உண்மையாகவே இருக்கின்றது. சொந்த வீட்டையாவது கட்டி முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா? “ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி” என்பது மற்றொரு முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான். ஆனால், பிரமச்சரியம் கலங்கிய நீர்க் குட்டிக்கு நிகரானது. அதாவது, பழத்தின் உள்ளே வாழும் வண்டுபோலானது. ஆனால், மணம் முடிப்பவனோ தேனிக்கு நிகரானவன். அவன் தனக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறான். எனவே, ஒரு மனிதன் தனித்து வாழ்வதை விட மண முடித்து வாழ்வது சிறப்பு என்று சான்றோர் கூறுவார். இவ்வாறு திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிய போதிலும் நமது மார்க்கக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, இறைவன் மனிதனை மிக மேலான வடிவத்தில் படைத்து, அவனை தன் பிரதிநிதியாக்கி, அவன் மீது தன் அருட்கொடைகளை அனைத்தையும் வாரி வழங்கினான். மனிதனுடைய நலனுக்காக மனித குளத்தை வாழ வைப்பதற்காக அவனின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதற்காக அழகின் திருவுருவாக, அன்பின் இருப்பிடமாக பெண்ணையும் தோற்றுவித்தான். அதனால்தான், பெண்மை அழகானது, மேலானது என்று ஆங்கில கவிஞன் மில்டன் வாயாரப் புகழ்கின்றான். நம் தமிழ் மொழியிலும் ‘பெண்’ எனும் சொல்லுக்கு ‘அழகு’ எனும் பொருள் இருப்பதை காணலாம். இல்லறம் எனும் பூஞ்சோலையில் பிரதானமாக ஐவகை நறுமணங்கள் வீசுகின்றன என்று உளவியல் மேதை சங்கைக் குரிய இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தனது ஒப்பற்ற இலக்கியமான இஹ்யாவுலூமித்தீனில் வரைந்திருக்கின்றார்கள்.
1. மக்கட் செல்வம்
2. புலனிச்சை அடக்குதல்
3. மகிழ்ச்சி
4. குடும்பச் சுமை குறைதல்
5. நிர்வாகம் கற்றல் என்பனவாகும்.
1. செல்வத்தில் சிறந்த செல்வம் விலைமதிக்க முடியாத குழந்தைச் செல்வமாகும். ஒரு மனிதனின் அமல்கள் (நற் செயல்கள்) அவனது மரணத்துடன் முடிந்துவிடுகின்றனவென்றாலும் அவன் செய்த நித்தியா தருமம், பயன் தரும் கல்வி, துஆச் செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றும் மரணத்தின் பின் அவனது அமல்களாக பயன் தருகின்றன என்ற நபிமொழி வழியாய் தமக்காக துஆச் செய்யும் குழந்தைகளை விட்டு செல்வதற்கு இத்திருமணம் துணை செய்கின்றது.
2. திருமணம் கண்ணையும் கற்பையும் காக்கும் கோட்டை. அது நம்மைத் தவறில் செல்லவிடாது தடுக்கும் அரண். “திருமணம் புரிந்தவர் தமது அற வாழ்வில் ஒரு பகுதியை காத்துக் கொள்கிறார். இனி, அவர் எஞ்சியிருக்கும் பகுதியில் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளட்டும்” என நம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
3. திருமணத்தால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தன் மனைவியுடன் கனிவாய்ப் பேசும்பொழுது மனம் மகிழ்வடைகிறது. மனம் எப்பொழுதும் ஒரு நிலையிலிருப்பதில்லை. அது சிலவேளை குழம்பிப் போகும். அவ்வேளை தன் கனிவான பெண்ணுடன் கலந்துறவாடும் போது அளவிலா ஆனந்தம் பெரும். எனவேதான் முத்தகீன்களெனும் பக்திமான்கள் மார்க்கம் அனுமதித்திருக்கும் மகிழ்ச்சிகளிலும் ஈடுபடுவது அவசியமாகின்றது என்கின்றனர். இக்கருத்தையே இறைவனும் தன் திருமறையில் “லியஸ்குன இலைஹா” அவளிடம் அமைதி பெரும் பொருட்டே துனைவியைப் படைத்ததாக திருவுளமாகிறான்.
4. திருமணத்தால் குடும்பப்பாரம் குறைகிறது. சமைப்பது, பெருக்குவது, விரிப்பது, துலக்குவது, வாழ்க்கைத் தேவைகளுக்கு இன்றியமையாத சாமான்களை சேகரிப்பது, இலலத்தின் பாதுகாப்பு போன்ற காரியங்களிலிருந்து ஆண்களுக்கு விடுதலை கிடைக்கிறது. ஒரு கணவன் வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும் மேற்கொள்கையில் அவனின் பொன்னான நேரங்கள் அதிலேயே கழித்துவிடும். சமுதாய தொண்டு புரிவதற்கோ, கற்றபடி அமல செய்வதற்கோ சந்தர்ப்பம் வைக்காமல் போய்விடும். இவ்வகையில் அவன் தனக்கொரு வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தேடுப்பத்தின் மூலமே வெற்றி பெற முடியும்.
5. திருமணம், நிர்வாகத் திறமையினைக் கற்பித்துக் கொடுக்கிறது. தலைமை பதவிக்கு நம்மை தயார் செய்கிறது. மனைவிக்கு செலுத்தவேண்டிய கடமைகளில் கண்ணுங்கருத்துமாய் இருந்தாலும் அவள் பண்பறிந்து நடத்தலும், அவளிழைக்கும் துன்பங்களை சகித்தலும், தம் மக்களுக்கு ஒழுக்கம் கற்பித்தலும், அவர்களை சன்மார்க்க வழிநடத்த முயற்சித்தலும், அவர்களுக்காக தர்ம வழி நின்று பொருளீட்டலும் மகத்தான நிர்வாகங்கலாகும். நீங்கள் ஒவ்வொருவரும் நிர்வாவிகள், உங்கள் நிர்வாகம் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
“ ஸாலிஹான நற்குனமுள்ள மனைவி சாபத்திற்குரிய துன்யாவைச் சார்ந்தவள் அல்ல, அவள் உனக்கு பரலோக காரியங்களில் துணை செய்பவளாவாள்” என்று மகான் அபூமுச்லிம் தாரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அருளுகிறார்கள். “ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதன்” எங்கள் இறைவனே! இகத்திலும் எங்களுக்கு நன்மையைத் தந்தருள்வாயாக! எனும் இப்பிரார்த்தனையில் கூறப்பட்டிருக்கும் ‘ஹஸனா’ எனும் பதத்திற்கு நற்குணமுள்ள மனைவி என்று மகான் கஃபுல் கர்ழி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பொருள் செய்திருக்கிறார்கள். “உங்களில் ஒவ்வொருவரும் நன்றியுணர்ச்சியுள்ள இதயத்தையும் தியானத்தில் நிலைத்திருக்கும் நாவையும் பரலோக காரியங்களில் துணை நிற்கும் நட்குனமுள்ள மனைவியையும் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக!” என்பது நபிமொழியாகும். “ஒருவன் தன் மனைவிக்காக செலவிடுவது தர்மம். அவர் அவளின் வாயின்பால் உயர்த்தும் ஒவ்வொரு கவளத்திற்கும் நன்மை நல்கப்படும்” என்று எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். திருமணம் புரிவது அவசியம் என்பது தெளிவாகிவிட்டது. இனி, நாம் தேர்ந்தெடுக்கும் மணமகள் மார்க்க ஒழுக்கம், குணம், அழகு, குழந்தை பெறும் தகுதி, வம்சம் இவைகளை கவனித்தல் அவசியமாகும். மனமகளின் குண, நலன்களை கவனியாது அழகையே பிரதானமானதாக கவனிப்பதில் அநேக கெடுதிகள் விளைகின்றன.
மனைவி ஒழுக்கமற்றிருப்பின் கணவன் மனநிம்மதியற்று துன்பப் புயலில் துவண்டு தவிக்கும் பலரைப் பார்க்கலாம். தீய குணமுடைய மனைவியால் குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுவதையும் காணலாம். இப்பிரச்சினைகள் நிகழாதிருக்கவே மனுக்குல மகுடம் மா நபி திலகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இதற்கு என்ன கூறினார்கள் தெரியுமா? “ஒரு ஆடவர் அழகுக்காக, பொருளுக்காக, குடும்பத்திற்காக, சன்மார்க்க ஒழுக்கங்களுக்காக ஓர் பெண்ணை மணந்து கொள்வதுண்டு. ஆனால், நீர் சன்மார்க்க ஒழுக்கமும் பண்புடையவளையே தேர்ந்தெடுத்துக்கொள்வாயாக” எனக் கூறினார்கள். (நூல்: இப்னுஹிப்பான்)
“பெருமைக்காகப் பெண் கொள்வோருக்கு அல்லாஹ் இழிவையே தருகிறான். பொருளுக்காக மண முடிப்போர்க்கு வறுமையை அதிகரிக்கிறான். அவளின் அழகுக்காக மணமுடிப்போருக்கு தாழ்வையே தருகிறான். ஆனால், தன் பார்வையைக் கட்டுப்படுத்தி தன் கற்பையும் காத்துக் கொல்வதற்காகவும், சுற்றத்தாரை தழுவி நடப்பதற்காகவும் மண மன முடிப்பவர்க்கு அல்லாஹ் அவளில் அவருக்கு நிம்மதி, சந்தோஷத்தையும், அவரில் அவளுக்கு நிம்மதி, சந்தோஷத்தையும் அளிக்கிறான்” என்று நம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தபரானி)
உங்கள் சிந்தனைக்கு ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டலாம் என விரும்புகின்றேன். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு நாள் நள்ளிரவில் நகர சுற்றி வருகையில் குடிசை ஒன்றில் இருவர் பேசிக் கொள்ளும் சப்தம் கலீபா அவர்களின் காதில் விழுந்தது. இவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று கவனிக்கையில், இப்பாலில் சற்று நீர் கலந்து விற்பனை செய்தால் கூடுதலான இலாபம் கிட்டும் என்று தாய் கூற, கலீபா அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று மகள் கூறினாள். இந்நேரத்தில் கலீபா அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கவா போகிறார்? என்று மீண்டும் தாய் கூற, அதற்கு மகள் இல்லை தாயே! கலீபா அவர்கள் நம்மை பார்க்கா விட்டாலும் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா! எனப் பதிலளித்தால். இச்சம்பாஷனை கலீபா உமர் (ரலியல்ல்ஹு அன்ஹு) அவர்களை பெரிதும் கவர்ந்தது. குடிசையில் வாழும் இளம் பெண்ணின் இறை பக்தியையும், நற்குண சீலத்தையும் நினைத்து பூரிப்படைந்தார்கள். பொழுது புலர்ந்ததும் தாயும் மகளும் கலீபா அவர்களின் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டார்கள். கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், தம் புதல்வர் ஆஸிமை அழைத்து இப்பெண்ணின் நற்குணத்தையும் இறைபக்தியையும் பாராட்டி, இப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பணித்தார்கள். புதல்வரும் சம்மதம் தெரிவிக்க, தாயும் மகளும் மனமகிழ்ந்தார்கள். திருமணமும் நடந்தேறியது. பிற்காலத்தில் இத்தம்பதிகளின் வழித்தோன்றலாகவே உலகம் போற்றும் உத்தமர் சங்கைக் குரிய உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அவதரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, அவர்கள் வாழ்வும் மலர்ந்தது. உலகுக்கு அவர்களால் நல்ல சந்ததிகளும் கிடைத்தன. சங்கைக்குரிய இமாம் ஷாபிஈ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அடிமை வர்க்கத்தைச் சேர்ந்த கருப்பு நிறமுடைய பெண்ணை தனது வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொன்றார்கள். அப்பெண்ணின் பெயர் பலாக். அந்த ஊரிலுள்ள பலரும் இமாம் அவர்களுக்கு அழகு சௌந்தர்யமுள்ள பெண்ணை மணமுடித்து வைக்க முயற்சி செய்தபோது எனக்கு அதற்கெல்லாம் அவகாசமில்லை பலாக்கில், பலாக் (பெரும் தத்துவம்) அமைந்திருக்கிறது எனக்கூறி மறுத்து விட்டார்கள். இவ்வாறு ஹன்பலி மத்ஹபின் இமாம் சங்கைக் குரிய அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு கண் ஒச்சமடைந்திருந்த ‘அவ்ராஉ’ என்ற பெண்ணை தம் இல்லறத் துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆனால், அவ்ராவின் தங்கை நல்ல அழகும், சௌந்தர்யமும் கொண்டவள். அவ்ராஉ அறிவு நுட்பமுடைய பெண். இவ்விருவரில் அறிவு நுட்பமுடைய அவ்ராதான் தனக்கு உகந்தவள் எனக் கூறி அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். நம் முன்னோர்களிடம் இப்பண்பே அதிகம் இருந்தது. பரம எழையாயினும், செல்வச் சீமானாயினும் ஒழுக்கத்திற்கும் நல்ல குணத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தனர்.
பர்தா (ஹிஜாப்) ஏன் அணிய வேண்டும்
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59 1. பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
2. தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது. பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது. பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் விபச்சாரம் கற்பழிப்பு, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கு காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.
இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள்
நடைமுறை ஒழுக்கங்கள்
இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.
ஸலாம் சொல்லுதல்
1. ஸலாம் சொல்லுவது முக்கியமான ஒரு சுன்னத்தாகும்.
2. ஒருவரை சந்திக்கும் போதும் அவரை விட்டு விடை பெரும் போதும் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள்.
3. ஸலாம் சொல்லுவது சுன்னத்தாக ஒன்றுதான், எனினும். அதற்கு பதில் சொல்லுவது பர்ளு என்பதை மறந்துவிடாதீர்கள்.
4. பெரியவர்கள், சிறியவர்களுக்கும், நிற்பவர்கள் , இருப்பவர்களுக்கும் வாகனத்தில் உள்ளவர்கள், கீழுள்ளவர்களுக்கும் சிறிய கூட்டம், பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் சொல்வது சுன்னத்தாகும்.
பள்ளிவாசளுடைய ஒழுங்கு முறைகளும், கவனிக்கவேண்டிய சுன்னத்தானவைகளும்
1. பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை உள்வைத்து பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்:
அல்லாஹும்மக்பிர்லி வfப்தஹ் லி அப்வாப ரஹ்மதிக்க
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹஸன் அவர்களது தாய் மூலமும் அவர்களது பாட்டன் மூலமும்.
ஆதாரம்: இப்னு ஸனீ
2. பள்ளியினுள் நுழைந்தபின் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள் யாரும் இல்லாவிட்டாலும் மலக்குமாராவது இருப்பார்கள். அதற்காக
அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸாலிஹீன் என்று கூறுங்கள்.
3. இஃதிகாபுடைய நிய்யத்தை நவைத்துல் இஃதிகாப fபீ ஆதல் மஸ்ஜிதி மா தும்து பீஹி என்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.
4. பள்ளியின் காணிக்கையாக இரண்டு ரக்அத்து தொழுது கொள்ளுங்கள்.
5. பள்ளியினுள் துன்யா சம்பந்தமான எந்த ஒரு விடயத்தையும் பேசவேண்டாம்.
6. அதனுள் யாராவது தொலைந்த பொருட்களைத் தேடினால்
லா ரதல்லாஹு அலைக்க (அல்லாஹ் உனக்கு அதை மீட்டித் தராமல் இருப்பானாக) என்று ஓதுங்கள். அதனுள் விற்பவர்களையோ வாங்குபவர்களையோ கண்டால் லா அர்பஹல்லாஹு திஜாரதக என்பதை ஓதிக்கொல்லுங்கள். (அதாவது அல்லாஹ் உன்னுடைய வியாபாரத்தில் இலாபத்தைத் தராமல் இருப்பானாக)
7. வெளியில்வரும்போது இடதுகாலைவைத்து கீழ்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்.
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலூக மின் fபல்லிக
அறிவிப்பவர்: அபூ ஹமீத், அபூ உஸைத்
ஆதாரம்: முஸ்லிம்
பிரயாணம்
கவனிக்கவேண்டிய சுன்னத்தான முறைகள்
1. பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக அத்துத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக அத்தில் குல் யா அய்யு அல் காபிரூன் இரண்டாவது ரக அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதுவது சுன்னத்தாகும்.
2. தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷி யையும் லி ஈலாபி குரைஷி யையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத் தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.
3. நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.
அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு
4. வீட்டில் இருந்து வெளியேறும் போது
பிஸ்மில்லாஹி தவகல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி
ஆதாரம்: திர்மிதி
5. வாகனத்தில் செல்லும் போது
ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்
அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூ தாவுத்
எயிட்ஸின் எதிரி பர்தாவே!
புனித தீனுல் இஸ்லாம், நல்லதோர் குடும்பம் சின்னாபின்னப்பட்டுவிடாது அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. எனவே, அக்குடும்பத்தில் மனோ இச்சை எனும் வைரஸ் தொற்றி அதன் இயற்கைச் சூழலைக் கேடுபடுத்திடாமல் மக்கள் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குனங்களென்ற உதவிவாய்ந்த தூண்களால் சுவர் எழுப்பியுள்ளது. மேலும், புனித இஸ்லாம் மார்க்கம், அனாச்சாரங்களின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியவற்றைச் தடுப்பதற்காக திரைகளை எற்படுத்துயுள்ளது. ஆணும், பெண்ணும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் இழிவிலிருந்து அவளின் தன்மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மேலும், குழப்பவாதிகள், தீய எண்ணம கொண்டவர்களின் தீங்குகளை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும், விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும், பெண்ணின் கண்ணியத்தையும் பத்தினித்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்கமாக்கியுள்ளான்.
அல் – குர்ஆனில் வல்ல நாயன், “(நபியே!) முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்களின் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும், அவற்றில் வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளால் தங்களின் முன்பகுதியை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்!” (24:31)
எனப் பறைசாற்றுகின்றான். குழப்பங்கள் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இக்காலத்தை விட வேறு எக்காலத்தில் அச்சம் அதிகமாக இருக்க முடியும்! காமுகர் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் நிரம்பியும் நல்லவர்கள் அறிதாகியும் விட்டனர். இஸ்லாம் பெண்களை அந்நிய ஆடவர்களுடன் கலந்துரவாடுவதை தடுத்திருப்பது போன்று மேற் கூறியவை அனைத்தும் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகும். இஸ்லாம் பாதிகாப்பின் மீதும், குழப்பத்தையும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அடைத்துவிடுவதின் மீதும் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதிலும் அந்நிய ஆடவர்களுடன் கலந்துரையாடுவதிலும், அவளின் வதனத்தைத் திறந்து செல்வதிலும், மனோ இச்சைகளைக் கிளறிவிடக்கூடியவைகளும், பாவத்திற்குக் காரணமான செயல்களை இலகுபடுத்துவதும், அவைகளைச் செய்யக் கூடியவர்களுக்கு அவற்றை இலகுவாக்கக்கூடிய வைகளாய் இருக்கின்றன. மேலும், மறைக்கப்பட வேண்டிய ஒளறத் திறக்கப்படுவதாலேயே எதிர்பால் கவர்ச்சி ஏற்படுகின்றது.
அதனால்தான் இறைவன் தனது அருள்மறையாம் குர்ஆனில்: “நபியுடைய மனைவியரே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருக்காதீர்கள்” (33: 53)
என வெளிச்சம் போட்டுகாடுகின்றான்.
ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவரில்லாதபோது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்த தேவைகளுக்காக மார்க்க வரம்புகளைக் பெண் தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை. ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை தடுக்கப்பட்டிருப்பது அவளது குடும்பத்தையும் நற்குணங்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் ஆன்மாக்களையும் நற்குணங்களையும் பாழாக்குவத்தின் மீது பேராசை உள்ளவனாக இருக்கிறான்.
“ஆண், பெண் இருவரும் தனித்திருக்கையில் மூன்றாவதாய் ஷைத்தான் இருக்கிறான்.” எனும் மணிமொழியை நினைவிற் கொள்க! பர்தா அணிவது அவசியம் தானா? பெண்ணை முக்காடிட்டு வீட்டினுள் மறைத்து வைப்பது தகுமா? வளர்ந்திருக்கும் விஞ்ஞான உலகில் நடமாட தடை விதிக்கலாமா? இது என்ன நியாயம்? திரையிட்டு சிறை வைக்கும் ஆடவர் ஆணவம் அடங்காதா? ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதியா? ஆடவர் உள்ளத்தை கவரத்தானே இறைவன் படைத்தான்? என்றெல்லாம் கூறி பர்தா கூடாது என்றே பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. நெருப்பும் பஞ்சும் நெருங்கினாலே அபாயம்! என்பது போல் ஓர் ஆணும அந்நிய பெண்ணும் பார்த்தாலே பெரும் ஆபத்து! பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். எந்த ஆண்மகனும் நாசமடைவது திண்ணம்! பர்தாவுக்குள் பதுங்கியிருக்க வேண்டிய பாவை பகிரங்கமாக வெளிவந்தால் அதுவும் நறுமணம் பூசி, ஆடை அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வந்தால் ஆண்களின் சலசலப்புத்திக்கு நல்ல தீனி படைத்தவளாக மாறிவிடுவாள். சீ.... ஒழுக்கக்கேடு சமூகத்தையே செல்லரித்துவிடும்!
பள்ளி முதல் கல்லூரி வரையிலும், அலுவலகங்களிலும் ஆண், பெண் பாகுபாடு இன்றி நெருங்கிப் பழகுவதால், பெண்களிடம் இயற்கையிலேயே இருக்க வேண்டிய நாணமும், நளினமும் சிதைந்து சீரழிந்து விடுகிறது. அத்தகையவர்களின் பெண்மை மரத்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் அவர்களது மணவாழ்வு மணமற்று, மகிழ்வற்று விவாகரத்து வரை போய்விடுகிறது. ஆணும், பெண்ணும் கலந்துரையாடிப் பழகும் தினசரிப் பழக்கமுள்ளவளின் கற்பு அனலிடை மெழுகாய் அழிந்துவிடும் என்பது நிச்சயம். ஏனெனில், ஓர் ஆணும், பெண்ணும் சந்தித்து கண் மூலமாகப் பெரும் இன்பம் காமத்தில் பாதி அல்ல, அதனிலும் பெரிது! என்பது வெள்ளிடைமலை. ஷைத்தானின் அம்பே பார்வையாகும்!
பர்தா அணிவதன் அவசியம்
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
(அல்குர்அன் 24:31)