Wednesday, 14 March 2012


கடல் சீற்றத்தால் இடம் மாறும் நாடு

பசுபிக் கடல் பகுதியில் கிரிபாதி என்ற சிறிய நாடு அமைந்துள்ளது. இது பவழத்தீவுகளை கொண்டது. கடல் சீற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வினால் இந்த நாட்டு மக்கள் தற்போது பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இங்கு 32 வீடுகளுடன் இருந்த தீவு கடலில் மூழ்கி மாயமாகிவிட்டது.
எனவே இந்த நாடு வேறு இடத்திற்கு இடமாறும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஜனாதிபதி அநோடி தோங் இது தொடர்பாக பிஜி நாட்டின் ராணுவ ஆட்சியாளருடன் பேச்சு நடத்தி தன்னுடைய நாட்டு மக்கள் குடியேற சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று பிஜி நிலம் கொடுத்தால் கிரிபாதி நாட்டு மக்கள் தங்களது தீவுகளை விட்டு வெளியேறி புதிய இடத்தில் குடியேறுவார்கள்.

No comments:

Post a Comment