Tuesday, 27 September 2011


37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

Font size:   
37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!
கனடாவில் 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆர்க்டிக் கடல் பகுதியில் இந்த படிமம் கிடைத்துள்ளது. இதுகுறித்து கனடா ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இதுவரை கண்டெடுக்கப்பட்ட மீன் படிமங்களிலேயே மிகவும் பழையதும் அரிய வகையை சேர்ந்ததுமான மீனின் படிமம் இது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் இது 37 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும் வட அமெரிக்காவின் கடல் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
மற்ற கடல் வாழ் உயிரினங்களை உணவாக கொள்ளும் வகையை சேர்ந்தது. வித்தியாசமான துடுப்பை கொண்ட இந்த மீன், லாக்கோக்நாதுஸ் எம்ப்ரியி எனப்படுகிறது. முழுமையான வளர்ச்சி அடைந்த இந்த வகை மீன்கள் பெரும்பாலும் 5 முதல் 6 அடி நீளம் வரை இருக்கும். மிகப்பெரிய தலை அமைப்பை கொண்டது. கண்கள் மிகவும் சிறியது. பெரிய வலுவான தாடையமைப்பும், கூர்மையான பற்களும் உடையது. இதுகுறித்த தொடர் ஆய்வில் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

No comments:

Post a Comment