நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல் | ||
சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன. முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம். via chartsbin.com இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது | ||
Tuesday, 27 September 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment