நீருக்கு அடியில் வேட்டையாடும் மனிதன் (வீடியோ இணைப்பு) |
நீருக்கு அடியில் அல்லது ஆழ்கடலுக்குள் செல்கின்றமை என்பது பொதுவாக மனிதர்களால் முடியாத காரியம். ஆனால் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கடல் வேட்டைக்காரர் ஒருவரால் மூன்று நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்துக் கொண்டு 65 அடி ஆழம் உடைய கடலுக்குள் செல்ல முடிகின்றது. அதுவும் மூச்சு விட உதவுகின்ற சாதனத்தை அணியாமலேயே. இவரால் ஆழ்கடலுக்குள்கூட ஐந்து நிமிடங்களுக்கு வேட்டையாட முடிகின்றது |
Thursday, 29 September 2011
Tuesday, 27 September 2011
37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!

கனடாவில் 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆர்க்டிக் கடல் பகுதியில் இந்த படிமம் கிடைத்துள்ளது. இதுகுறித்து கனடா ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இதுவரை கண்டெடுக்கப்பட்ட மீன் படிமங்களிலேயே மிகவும் பழையதும் அரிய வகையை சேர்ந்ததுமான மீனின் படிமம் இது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் இது 37 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும் வட அமெரிக்காவின் கடல் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
மற்ற கடல் வாழ் உயிரினங்களை உணவாக கொள்ளும் வகையை சேர்ந்தது. வித்தியாசமான துடுப்பை கொண்ட இந்த மீன், லாக்கோக்நாதுஸ் எம்ப்ரியி எனப்படுகிறது. முழுமையான வளர்ச்சி அடைந்த இந்த வகை மீன்கள் பெரும்பாலும் 5 முதல் 6 அடி நீளம் வரை இருக்கும். மிகப்பெரிய தலை அமைப்பை கொண்டது. கண்கள் மிகவும் சிறியது. பெரிய வலுவான தாடையமைப்பும், கூர்மையான பற்களும் உடையது. இதுகுறித்த தொடர் ஆய்வில் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Posted in ஆய்வுகள்
நாகரீக வளர்சியால் உருவான வினோத பாதணிகள்(படங்கள் உள்ளே)
WRITTEN BY ADMIN ON SEPTEMBER 25TH, 2011 | NO COMMENTS

பாதங்களின் பாதுகாப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட பாதணிகள் இன்று நாகரீக வளர்ச்சியால் ஒரு ஆடம்பட பொருளா மாறிவிட்டது. இங்கே இருக்கும் படங்களை பாருங்கள் நவ நாகரீகத்தால் உருவாக்கப்பட்ட விசேட பாதணிகள்..

நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல் | ||
சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன. முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம். via chartsbin.com இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது | ||
Sunday, 25 September 2011
இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள் இணைப்பு) |
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
25-09- 2011
![]() | ![]() |
ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். |
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும். தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதி செய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்:
ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.
பரிசோதனை:
ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ் கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்த போது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன. தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை:
ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால் நமது பெளதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, 23 September 2011
![]() | ![]() |
பிரான்சில் தடையை மீறி பர்தா அணிந்து வந்த 2 இஸ்லாமிய பெண்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பிரான்ஸ்சில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிய கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் தீவிரவாதம் அதிகரித்துள்ள நிலையில்... |
பர்தாவை தவறாக பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும், மத வழக்கங்களுக்கு தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீயக்ஸ் நகரில் பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் நேற்று அபராதம் விதித்தது. ஹிந்த் அமாஸ் (32) என்ற பெண்ணுக்கு 120 யூரோவும், நஜாத் நய்த் அலி (36) என்ற பெண்ணுக்கு 80 யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக இவர்கள் கூறியுள்ளனர்.



அபராதத் தொகை ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், எங்கள் மதவழக்கங்களை பின்பற்றுவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றார். பிரான்ஸ் தவிர பெல்ஜியம், இத்தாலியின் சில நகரங்களிலும் பர்தாவுக்கு தடை உள்ளது.
![]() | ![]() |
விண்டோஸ் கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது ஆண்டிவைரஸ் மென்பொருள் உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா என்பதை பற்றி... |
சில நேரங்களில் கணினியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணினியில் நிறுவி ஸ்கான் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். எனினும் ஒரே நேரத்தில் இரு ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நிறுவ முடியாது.

பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை தொடர்ச்சியாக இங்கே பார்க்கலாம்.
Bitdefender online scanner எனும் பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருளின் இலவச ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்பு இதுவாகும். இங்கே சென்று Start Scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பாக்ஸ் ஆயின் அதற்குரிய ஆட் ஒன் ஐ நிறுவ வேண்டும். அதிலே Quick Scan என்பதை அழுத்தி கணினியை வேகமாக ஸ்கான் செய்து கொள்ளமுடியும்.
இணையதள முகவரி : Bitdefender.com
Wednesday, 21 September 2011
இலங்கை பேரீச்சம் பழம்... |
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களில் காய்த்து பழமாகியுள்ள பேரீச்சம் பழங்களை வைபவரீதியாக பறிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.![]() பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர். காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத் உட்பட முக்கியஸ்த்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். முதலாவது பேரீச்சம் பழத்தை வைபவ ரீதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பறித்தார். காத்தான்குடி பிரதான வீதியில் எண்பது பேரீச்சம் பழ மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
அம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)
கீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும்பத்துடன் புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்படுகின்றான். அவன் தனது குடும்பத்துடன் வெளியேறுவதை கண்டு இடைமறித்த புலிகள் அக்குடும்பம் அங்கிருந்து வெளியேற முற்பட்டதற்குத் தண்டனையாக அச் சிறுவனது இரு கால்களையும்கோடாரிகொண்டு குடும்பத்தினர் முன்நிலையில் வெட்டி துண்டாடுகின்றனர்.
குற்றுயிராக விழுந்து கிடக்கும் அச்சிறுவனைச் சுற்றி நின்று குடும்பத்தினரும், வன்னியில் உள்ள மக்களும் ஓலமிடுகின்றனர். அங்கு விரையும் மனிதாபிமான பணியாளர்கள் அச்சிறுவனுக்கு சிகிச்கையளிக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காமல் அவனது உயிர் அனைவர் முன்னிலையிலும் பிரிகின்றது.
இவ் வீடியோக்காட்சி மிகவும் அகோரமானது. எனவே சிறுவர்கள், இருதயநோய், மனநோய் படைத்தோர் தயவு செய்து பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இக்காட்சியை நாம் பிரசுரிப்பதன் நோக்கம் புலிகள் சார்ந்தோர் நிச்சயமாக புலிகளின் அராஜகங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். எது எவ்வாறாயினும் இவ்வாறானதொரு அகோர காட்சியை பிரசுரித்தமைக்காக இலங்கைநெற் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
This is a very disturbing video. Should not be viewed by children.
This video shows the barbaric acts that were done to a boy who, together with his family, tried to escape being held as a 'human shield" by the terrorists of Sri Lanka, the Liberation Tigers of Tamil Eelam.
The boy's legs had been chopped off by an axe, in front of his own family, as a 'punishment' for trying to escape. Mercifully, the boy had died soon.
This is only a tiny fraction of the inhuman treatment that innocent Tamil people who are being held by the LTTE for their protection are being subjected to. The Tamil diaspora in western countries paint a very different picture, just to get international support to stop the Sri Lankan armed forces from completely eliminating these psychopathic terrorists. The government of Sri Lanka is trying to help these innocent people to lreagain a life free from these terrorists.
They say that one can fool some people all the time, All the people some times,
but no one can fool all the people all the time.
This video should speak a lot of words for those who care. The dialogs in the video are in Tamil.
V111
குற்றுயிராக விழுந்து கிடக்கும் அச்சிறுவனைச் சுற்றி நின்று குடும்பத்தினரும், வன்னியில் உள்ள மக்களும் ஓலமிடுகின்றனர். அங்கு விரையும் மனிதாபிமான பணியாளர்கள் அச்சிறுவனுக்கு சிகிச்கையளிக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காமல் அவனது உயிர் அனைவர் முன்னிலையிலும் பிரிகின்றது.
இவ் வீடியோக்காட்சி மிகவும் அகோரமானது. எனவே சிறுவர்கள், இருதயநோய், மனநோய் படைத்தோர் தயவு செய்து பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இக்காட்சியை நாம் பிரசுரிப்பதன் நோக்கம் புலிகள் சார்ந்தோர் நிச்சயமாக புலிகளின் அராஜகங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். எது எவ்வாறாயினும் இவ்வாறானதொரு அகோர காட்சியை பிரசுரித்தமைக்காக இலங்கைநெற் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
This is a very disturbing video. Should not be viewed by children.
This video shows the barbaric acts that were done to a boy who, together with his family, tried to escape being held as a 'human shield" by the terrorists of Sri Lanka, the Liberation Tigers of Tamil Eelam.
The boy's legs had been chopped off by an axe, in front of his own family, as a 'punishment' for trying to escape. Mercifully, the boy had died soon.
This is only a tiny fraction of the inhuman treatment that innocent Tamil people who are being held by the LTTE for their protection are being subjected to. The Tamil diaspora in western countries paint a very different picture, just to get international support to stop the Sri Lankan armed forces from completely eliminating these psychopathic terrorists. The government of Sri Lanka is trying to help these innocent people to lreagain a life free from these terrorists.
They say that one can fool some people all the time, All the people some times,
but no one can fool all the people all the time.
This video should speak a lot of words for those who care. The dialogs in the video are in Tamil.
V111
Tuesday, 20 September 2011
![]() | ![]() |
நானோ காரை தங்கத்தில் வடிவமைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை இந்தியாவின் ஏழை மக்களுக்கு வராது போகலாம். இந்தியாவின் முக்கிய பணக்காரரான ரத்தன் டாத்தாவுக்கு வராது போகுமா?. அவரது சிந்தனைக்கு வடிவம் கொடுத்தது கோல் பிளஸ் நகை வடிவமைப்பு நிறுவனம். |
நேற்று மாலை மும்பையின் நானோ காட்சி அறை ஒன்றில் இந்தத் தங்கக் காரை, டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்தார். இதன் போது இக்கார் குறித்த விபரங்கள் செய்தியாளர்களிடம் தெரியப்படுத்தப்படுகையில்.
இந்தத் தங்கக் கார், இந்திய நகைத் தயாரிப்பில் பாராம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் 14வகைத் தொழில் நுணுக்கங்களுடன், 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் அலங்காரக் கற்களும், சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரினை இவ்வாறு தங்கத்தால் அலங்கரித்த, கோல்ட்பிளஸ் சாரிபில் கருத்துத் தெரிவிக்கையில், உலகெங்கிலும் இந்திய நகைவடிவமைப்புக்கு தனிமரியாதை உண்டெனவும், 5 ஆயிரம்ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்தப் பாராம்பரியத்தைக் கொண்டாடும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் விலைகுறைந்த கார் என்ற அறிமுகத்துடன் விற்பனைக்கு வந்த நானோ காரின், தங்கமாடலின் தயாரிப்புப் பெறுமதி 22 கோடி ரூபா. இந்த கார் விற்பனைக்கு அல்ல. நானோவின் விளம்பரத்துக்கான காட்சிப்படுத்தலுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தி. உங்கள் ஊர் நானோ காட்சியறைக்கும்,

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இந்தக் கார் விரைவில் வலம் வரலாம்.



News : Source
Subscribe to:
Posts (Atom)