Wednesday, 2 November 2011

ஈராக்கியா கிராமம் என பெயர் மாறும் சதாம் ஹுசைன் கிராமம் 
[ - அஸீம் - ] [ visits : 150 ]
நேற்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இதுவரை காலமும் நாமறிந்த சதாம் ஹுசைன் என அழைக்கப்பட்ட கிராமம் ஈராக்கியா கிராமம் என பெயர் மாற்றப்பட்டு மேலதிக உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு கச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான பெயர் மாற்றத்திற்கு காரணம் இது வரை காலமும் இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஈராக்கியா ஜும்ஆ பள்ளி வாயலுக்கும், மத்ரஸாக்கும் ஈராக்கிலிருந்து நிதி உதவிகள் கிடைத்தவண்ணமிருந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன் இப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த ஈராக் குழு சதாம் ஹுசைன் என்னும் பெயரில் இன்னுமிருந்தால் தற்போது இருக்கும் அரசிடமிருந்து எதுவித உதவிகளையும் பெறமுடியாது என்னும் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்தே இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment