ஜெட் எஞ்சினைப் பொருத்தி சுவிஸ் ஏப்ஸ் மலை மீது பறந்து சாகசம் !
.
![]() | ![]() |
சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல்யமான மலைத்தொடர் ஏப்ஸ் மலைத்தொடராகும். கடுங்குளிருடன் கூடிய கால நிலை அங்கே காணப்படுவதோடு அதன் உயரம் சுமார் 15,000 அடி ஆகும். அதன் மீது இதுவரை விமானங்களே பறந்துள்ள நிலையில் அதன் மேல் பறக்கும் ஆசை ரோசி என்னும் 52 வயது முதியவருக்கு... |
தனது வீட்டில் தயாரித்த ஜெட் எஞ்சினைக் கொண்டு தான் பறக்கவேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். இதற்கமைவாக அவரே அந்த எஞ்சினையும் வடிவமைத்துள்ளார்.
மணிக்கு 125 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பறக்கும் இயந்திரத்தை தயாரித்து அதனை ஒரு உடை போல அவர் அணிந்து ஏப்ஸ் மலை மீது பறந்துள்ளார். உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர் ஏப்ஸ் மலைத்தொடரின் உச்சியில் இருந்து குதித்து தனது ஜெட் எஞ்சினை(இயந்திரத்தை) ஸ்டாட் செய்து பறந்துள்ளார்.
இவ்வளவு மைல் வேகமாகப் பறக்கும் இந்த இயந்திரத்துக்கு தரை இறங்க சக்கரங்கள் இல்லை. அப்படி என்றால் அவர் எப்படி தரையிறங்கியிருப்பார் எனப் பலரும் யோசிக்கக்கூடும்.
அது தான் சிம்பிளான விடையம். பறப்பு முடிவடைந்து எஞ்சினில் எரிபொருள் தீர்ந்ததும் தனது பரசூட்டைப் பாவித்து அவர் இலகுவாக தரையிறங்கியுள்ளார் அவ்வளவுதான்.

50 வயதைக் கடந்தாலே தாம் முதியவர்கள் எனக் கருத்தும் பலர் இருக்கும்போது ரோசி என்னும் இவர் 52 வயதில் பல சாகசங்களைப் புரிந்துவருகிறார்
No comments:
Post a Comment