Saturday, 12 November 2011


அதிவேக மனித இயந்திரங்கள் அறிமுகம்


இயந்திரங்கள் மனித உற்பத்தி துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன . அதுமட்டுமல்ல விளையாட்டு, கேளிக்கை என பலதுறைகளிலும் இந்த ரோபோக்கள் கலக்கி வருகின்றன . ஒரு ரோபோ எந்த வித உணர்ச்சியும் இல்லாத அடிமை போன்றது. அது தனக்கு இடப்பட்ட கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக பொறுமையாக நிறைவேற்றும் தன்மை கொண்டது.

இப்பொழுது இதன் அடுத்த பரிணாமமாக இதன் வேகத்தை அதிகப்படுத்த திட்டமிட்டதின் பயனாக `குய்க் பிளேசர்' எனப்படும் அதிவிரைவு ரோபட்டுகள் தயாரிக்கப்பட்டன.இதன் வேகம் பந்தயக் கார்களை விட அதிகம். அதாவது பார்முலா-1 பந்தயக் காரை விட 5 மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து அந்த ரோபோவின் வேகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்றைய உலகின் வேகத்திற்கேற்ப தன்னை மெருகூட்டிக் கொண்டிருக்கும் இந்த ரோபட்டுக்கள் இயந்திரத் துறையில் பல உற்பத்தி புரட்சிகளை ஏற்படுத்த உள்ளன.


இத்தகைய அதி வேக ரோபட்டுக்களை மெல்ல மெல்ல மற்ற துறைகளிலும் பயன்படுத்தப் போவதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். நூறு நிமிடத்தில் செய்ய வேண்டிய காரியத்தை ஒரு நிமிடத்தில் செய்து முடிக்கும் சூப்பர் ரோபட்டுகளாக இவை வலம் வர உள்ளன. `குய்க் பிளேசர்' 4 உந்து சக்திகளைக் கொண்டு இயங்கும் திறன் கொண்டது. செங்குத்து நிலையில் இயங்கும் இது 1200 மி.மீ விட்டம் மற்றும் 250 மி.மீ உயரம் அளவுக் கொண்ட உருளையைக் கொண்டுள்ளது. இது 200 டிகிரியில் சுதந்திரமாக சுழலும் தன்மைக் கொண்டது.

`குய்க் ப்ளேசர்'-ன் முக்கிய அம்சம் என்னவென்றால் இது ஒரு நிமிடத்திற்கு 200 பொருட்களை ஓரிடத்தில் இருந்து எடுத்து வைக்கும் திறன் கொண்டது. தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவில் இது பயன்படுத்தப்பட்டால் இது அதி வேகமாக பணிபுரியும். மேலும் கன்வேயர் பெல்ட் எனப்படும் நகரும் பட்டைகளில் வரும் பொருட்களை எடுப்பதற்கு மற்றும் வைப்பதற்கு உகந்ததாக இந்த குயிக் பிளேசர் இருக்கும். இது பல்வேறு பிரிவுகளைக் கொண்ட தொழிற்சாலைகளில் பல்வேறு பணிகளை குறைவான நேரத்தில் சாமர்த்தியமாக கையாளும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


உதாரணமாக உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, விவசாயம், அழகுசாதனம் தயாரிக்கும் இடம் போன்றவைகளில் இது பல்வேறு நிலைகளில் பணிபுரியும். கீழ்க்கண்ட படிநிலைகளில் இதன் பணி அமைகிறது. சாக்லேட், அதனை வடிவத்திற்கு கொண்டுவரும் பொருட்டு அதனை பொருத்திவைத்தல், பார் வடிவில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை அடுக்குகளாக கட்டுவதற்கு, பிஸ்கட் வகைகளை தரம் பிரித்து அதனை நிர்ணயிக்கப்பட்ட அளவாக பிரித்தல் மற்றும் அடுக்குகளாக கட்டுதல், மற்றும் உணவுப் பொருட்களை தரம் பிரித்தல் அதாவது தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் இதன் பணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த `குய்க் ப்ளேசர்' ரோபோட்டின் மொத்த எடையே 2 கிலோகிராம் தான் ஆகும். 

No comments:

Post a Comment