Saturday, 12 November 2011


முதலையின் தலையைக் கொண்ட அதிசயமீன்

கிழக்கு ஜாவா பகுதியில் முதலையின் தலையுடன் கூடிய அதிசய மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
சுபாட்டே என்பவர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தனது தூண்டிலை ஒரு முதலை இழுப்பதைப் போன்று அவதானித்தார்.
பின்னர் அது ஒரு மீனைப்போன்று சுழழவே பிடித்துப் பார்த்ததும் அவர் வியந்து போனதாக தெரிவித்தார்.
அதனுடைய பற்கள், தாடை மற்றும் முகம் போன்ற அனைத்தும் ஒரு சிறிய முதலையைப் போன்றே காணப்பட்டது என்றும் தெரிவித்தார்.
உண்மையில் இது ஒரு வித்தியாசமான மீன் இனம் எனறு கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் இது போன்ற மீன் பிடிபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்கு பகுதியில் றேகல் எனும் இடத்திலும் இது போன்ற மீன் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment