வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு | ||
எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். இணையதள முகவரி |
Wednesday, 30 November 2011
Monday, 28 November 2011
இதுவரை கண்டிராத கோணத்தில் அரிய உயிரினங்கள் |
![]() தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் அழகானவை. ( மனிதனும் ஒரு சமூகவிலங்கினமே) கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை. விலங்குகளின் அழகினைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது திறமையான படப்பிடிப்பின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். இவர் புகைப்படம் எடுத்துள்ள விலங்குகள் சில.அவையும் மிகவும் அரியவை. மேலும் மிகவும் அருகிலிருந்தும் வெவ்வேறான கோணத்திலும் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் மிரட்டும் விதமாகவும் உள்ளன. ![]() ![]() ![]() ![]() |
ஜெட் எஞ்சினைப் பொருத்தி சுவிஸ் ஏப்ஸ் மலை மீது பறந்து சாகசம் !
.
![]() | ![]() |
சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல்யமான மலைத்தொடர் ஏப்ஸ் மலைத்தொடராகும். கடுங்குளிருடன் கூடிய கால நிலை அங்கே காணப்படுவதோடு அதன் உயரம் சுமார் 15,000 அடி ஆகும். அதன் மீது இதுவரை விமானங்களே பறந்துள்ள நிலையில் அதன் மேல் பறக்கும் ஆசை ரோசி என்னும் 52 வயது முதியவருக்கு... |
தனது வீட்டில் தயாரித்த ஜெட் எஞ்சினைக் கொண்டு தான் பறக்கவேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். இதற்கமைவாக அவரே அந்த எஞ்சினையும் வடிவமைத்துள்ளார்.
மணிக்கு 125 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பறக்கும் இயந்திரத்தை தயாரித்து அதனை ஒரு உடை போல அவர் அணிந்து ஏப்ஸ் மலை மீது பறந்துள்ளார். உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர் ஏப்ஸ் மலைத்தொடரின் உச்சியில் இருந்து குதித்து தனது ஜெட் எஞ்சினை(இயந்திரத்தை) ஸ்டாட் செய்து பறந்துள்ளார்.
இவ்வளவு மைல் வேகமாகப் பறக்கும் இந்த இயந்திரத்துக்கு தரை இறங்க சக்கரங்கள் இல்லை. அப்படி என்றால் அவர் எப்படி தரையிறங்கியிருப்பார் எனப் பலரும் யோசிக்கக்கூடும்.
அது தான் சிம்பிளான விடையம். பறப்பு முடிவடைந்து எஞ்சினில் எரிபொருள் தீர்ந்ததும் தனது பரசூட்டைப் பாவித்து அவர் இலகுவாக தரையிறங்கியுள்ளார் அவ்வளவுதான்.

50 வயதைக் கடந்தாலே தாம் முதியவர்கள் எனக் கருத்தும் பலர் இருக்கும்போது ரோசி என்னும் இவர் 52 வயதில் பல சாகசங்களைப் புரிந்துவருகிறார்
Sunday, 27 November 2011
சென்னை விமான நிலையத்திற்கு புதிய கார் பார்கிங் அதி பாதாளத்தில்!
.
![]() | ![]() |
சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், விமான நிலையத்திற்கு எதிரே, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தில், மல்டிலெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. |
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மல்டி லெவல் கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டது. புதிய கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ், மொத்தம், 56283 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில், ஒரே நேரத்தில், 1338 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, போதிய இடம் இல்லை. எனவே தற்காலிகமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து, அனைத்து முனையங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, விமான நிலைய ஆணையம், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தற்போதுள்ள விமான நிலையத்திற்கு எதிரே பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. அதில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்திற்கு தேவையான நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று, அங்கு கார் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் பேசும்போது "விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பாதுகாப்புத் துறை நிலத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு குத்தகையின் அடிப்படையில் நிலத்தை பெற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் பேசி எடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது என்றார்
Tuesday, 22 November 2011
கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்!
![]() | ![]() |
பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. |
இங்கு 2,426 ஜாடிகளில் பூக்கன்றுகள் தொங்குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. உண்மையில் கண்ணைக் கவரும் பல்வேறு நிறங்களில் அழகழகாக பூத்துக் குலுங்குகின்றன பூக்கள். இது உண்மையில் ஒரு சொர்க்கலோகம் தான்.






News : Source
Saturday, 19 November 2011
கடலின் அடியில் காணப்படும் வினோதமான மியூசியம் |
![]() அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில வினோத பொருட்களை படத்திலும், காணொளியிலும் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Wednesday, 16 November 2011
2025ல் நாசா வெளியிடவிருக்கும் அதிநவீன விமானங்கள் |
![]() இப்படி அதிவேகமாக செல்லக்கூடிய விமானங்களை 2025ம் ஆண்டுகளில் வெளியிட இருக்கின்றது. இவ்விமானங்களிற்கான மாதிரி படங்களே இவை. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Saturday, 12 November 2011
அதிவேக மனித இயந்திரங்கள் அறிமுகம்
இயந்திரங்கள் மனித உற்பத்தி துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன . அதுமட்டுமல்ல விளையாட்டு, கேளிக்கை என பலதுறைகளிலும் இந்த ரோபோக்கள் கலக்கி வருகின்றன . ஒரு ரோபோ எந்த வித உணர்ச்சியும் இல்லாத அடிமை போன்றது. அது தனக்கு இடப்பட்ட கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக பொறுமையாக நிறைவேற்றும் தன்மை கொண்டது.
இப்பொழுது இதன் அடுத்த பரிணாமமாக இதன் வேகத்தை அதிகப்படுத்த திட்டமிட்டதின் பயனாக `குய்க் பிளேசர்' எனப்படும் அதிவிரைவு ரோபட்டுகள் தயாரிக்கப்பட்டன.இதன் வேகம் பந்தயக் கார்களை விட அதிகம். அதாவது பார்முலா-1 பந்தயக் காரை விட 5 மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து அந்த ரோபோவின் வேகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்றைய உலகின் வேகத்திற்கேற்ப தன்னை மெருகூட்டிக் கொண்டிருக்கும் இந்த ரோபட்டுக்கள் இயந்திரத் துறையில் பல உற்பத்தி புரட்சிகளை ஏற்படுத்த உள்ளன.
இத்தகைய அதி வேக ரோபட்டுக்களை மெல்ல மெல்ல மற்ற துறைகளிலும் பயன்படுத்தப் போவதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். நூறு நிமிடத்தில் செய்ய வேண்டிய காரியத்தை ஒரு நிமிடத்தில் செய்து முடிக்கும் சூப்பர் ரோபட்டுகளாக இவை வலம் வர உள்ளன. `குய்க் பிளேசர்' 4 உந்து சக்திகளைக் கொண்டு இயங்கும் திறன் கொண்டது. செங்குத்து நிலையில் இயங்கும் இது 1200 மி.மீ விட்டம் மற்றும் 250 மி.மீ உயரம் அளவுக் கொண்ட உருளையைக் கொண்டுள்ளது. இது 200 டிகிரியில் சுதந்திரமாக சுழலும் தன்மைக் கொண்டது.
`குய்க் ப்ளேசர்'-ன் முக்கிய அம்சம் என்னவென்றால் இது ஒரு நிமிடத்திற்கு 200 பொருட்களை ஓரிடத்தில் இருந்து எடுத்து வைக்கும் திறன் கொண்டது. தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவில் இது பயன்படுத்தப்பட்டால் இது அதி வேகமாக பணிபுரியும். மேலும் கன்வேயர் பெல்ட் எனப்படும் நகரும் பட்டைகளில் வரும் பொருட்களை எடுப்பதற்கு மற்றும் வைப்பதற்கு உகந்ததாக இந்த குயிக் பிளேசர் இருக்கும். இது பல்வேறு பிரிவுகளைக் கொண்ட தொழிற்சாலைகளில் பல்வேறு பணிகளை குறைவான நேரத்தில் சாமர்த்தியமாக கையாளும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, விவசாயம், அழகுசாதனம் தயாரிக்கும் இடம் போன்றவைகளில் இது பல்வேறு நிலைகளில் பணிபுரியும். கீழ்க்கண்ட படிநிலைகளில் இதன் பணி அமைகிறது. சாக்லேட், அதனை வடிவத்திற்கு கொண்டுவரும் பொருட்டு அதனை பொருத்திவைத்தல், பார் வடிவில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை அடுக்குகளாக கட்டுவதற்கு, பிஸ்கட் வகைகளை தரம் பிரித்து அதனை நிர்ணயிக்கப்பட்ட அளவாக பிரித்தல் மற்றும் அடுக்குகளாக கட்டுதல், மற்றும் உணவுப் பொருட்களை தரம் பிரித்தல் அதாவது தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் இதன் பணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த `குய்க் ப்ளேசர்' ரோபோட்டின் மொத்த எடையே 2 கிலோகிராம் தான் ஆகும்.
உலகின் பெரிய உலங்கு வானூர்திகள் பார்த்ததுண்டா? (கதிர்வீச்சு, கதிரொளி இணைப்பு)
- பிரசுரித்தவர்: Sukkran November 10, 2011
- Add a comment
Hughes XH-17
50,000 இறாத்தல் (22,680 kg)
50,000 இறாத்தல் (22,680 kg)
இது உலகின் ஏழாவது பெரிய உலங்குவானூர்தி ஆகும். இது XH-17 பறக்கும் கொக்கு என்று அழைக்கப்படும். அதிக செலவினால் இதன் உற்பத்தி ஒன்றுடன் நிறுத்தப்பட்டது. இது 1940 இல் இருந்து கட்டுமான ஒரு ஆராய்ச்சி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.
Role - Helicopter
Manufacturer - Hughes Helicopters
First flight - 23 October 1952
Retired – December 1955
Status – Scrapped
Number - built 1
Sikorsky CH-54
47,000 இறாத்தல் (21,320 kg)

இது உலகின் எட்டாவது பெரிய உலங்குவானூர்தி ஆகும். இது அமெரிக்காவின் உற்பத்தியாகும். இது தீயணைப்பு துறையில் மிகவும் சிறப்பாக செயல்ப்படுகிறது.
47,000 இறாத்தல் (21,320 kg)

இது உலகின் எட்டாவது பெரிய உலங்குவானூர்தி ஆகும். இது அமெரிக்காவின் உற்பத்தியாகும். இது தீயணைப்பு துறையில் மிகவும் சிறப்பாக செயல்ப்படுகிறது.
Role-Heavy-lift cargo helicopter
Manufacturer -Sikorsky Aircraft
First flight -9 May 1962
Status -retired
Primary user -United States Army
Number built -105
Variants -S-64 Skycrane
இது உலகின் ஐந்தாவது பெரிய உலங்குவானூர்தி ஆகும் இது அமெரிக்க இராணுவத்திடம் உள்ள மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆகும். இது கடல் டிராகன் என அழைக்கப்படுகிறது.
Role -Heavy-lift cargo helicopter
Manufacturer -Sikorsky Aircraft
First flight -1 March 1974
Introduction -1981
Status -Active service
Primary users -United States Marine Corps
United States Navy
Japan Maritime Self-Defense Force
Number built -≈115
Unit cost -US$24.36 million (1992) average[1]
Developed from -CH-53 Sea Stallion
Developed into -Sikorsky CH-53K
Subscribe to:
Posts (Atom)