ஓன்லைனில் கோப்புகளை அனுப்புவதற்கு | ||
சில தளங்களுக்கு சென்று நம் கோப்புகளை அனுப்புவதாக இருந்தால் அதில் வரும் விளம்பரங்களை தாண்டி அனுப்புவதற்குள் பல சிரமங்களை தாண்ட வேண்டி இருக்கும். அனுப்பிய பின் அந்த தள முகவரியை மின்னஞ்சல் மூலம் நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தெரிவிப்போம். ஆனால் இந்தவித சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரே உதையில் நண்பர்களின் மின்னஞ்சலுக்கு கோப்புகளை அனுப்பலாம். இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு Start Sending Files என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக அனுப்பலாம். கோப்புகளின் அளவிற்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை, எத்தனை பேருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை மட்டும் கொடுத்து அனுப்பினால் போதும், எளிதாக சென்றுவிடும். தரவிறக்க விரும்புவர்களுக்கு பயனாளர் கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை நண்பர்கள் நாம் அனுப்பிய கோப்புகளை தரவிறக்கியுள்ளனர் என்பது முதல் அனைத்து விதமான தகவல்களையும் கொடுக்கிறது. எல்லாவிதமான கோப்புகளையும் இத்தளம் மூலம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் |
Monday, 31 October 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment