
இதுதான் உலகிலேயே அதிக பெறுமதியானதும் சொகுசானதுமான வாகனம். இதன் பெறுமதி £1.9million. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம்.
ஆஸ்திரேலிய தயாரிப்பான இந்த வாகனம் eleMMent palazzo என்று அழைக்கப்படுகிறது. 215 sq ft பரப்பளவுடைய விசாலமான இடத்தை கொண்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய படுக்கையறையும், Bar மற்றும் 40inch அகலத்திரையுடன் Home theater வசதிகளையும் கொண்டுள்ளது.
ஓட்டுனருக்கு தனியானதொரு அறையும் காணப்படுகிறது. இதன் வேகம் தோற்றத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 93 Kmph என்ற வேகத்திலே செல்லும். சொகுசு வாகனமாக இருந்தாலும் பார ஊர்தி (heavy vehicle ) வரிசையில் தான் உள்ளது.
காலநிலைக்கேற்ப உள்ளே வெப்பநிலைகளை கட்டுப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவை சாதாரண குளிரூட்டிகள் போன்றவைதான்.
ஆனாலும் செயற்பாட்டில் வேறுபட்டவை. அத்துடன் இதன் பரப்பளவை 430 sq ft, வரையில் அதிகரிக்கும் வசதிகளும் இதில் உள்ளன. இதன் மூலம் விசாலமான தோற்றத்தைப் பெறும்.







No comments:
Post a Comment