Thursday, 3 November 2011


ஆயிரம் கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்!

Font size:   
ஆயிரம் கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்!
1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, 2 November 2011

ஈராக்கியா கிராமம் என பெயர் மாறும் சதாம் ஹுசைன் கிராமம் 
[ - அஸீம் - ] [ visits : 150 ]
நேற்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இதுவரை காலமும் நாமறிந்த சதாம் ஹுசைன் என அழைக்கப்பட்ட கிராமம் ஈராக்கியா கிராமம் என பெயர் மாற்றப்பட்டு மேலதிக உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு கச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான பெயர் மாற்றத்திற்கு காரணம் இது வரை காலமும் இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஈராக்கியா ஜும்ஆ பள்ளி வாயலுக்கும், மத்ரஸாக்கும் ஈராக்கிலிருந்து நிதி உதவிகள் கிடைத்தவண்ணமிருந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன் இப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த ஈராக் குழு சதாம் ஹுசைன் என்னும் பெயரில் இன்னுமிருந்தால் தற்போது இருக்கும் அரசிடமிருந்து எதுவித உதவிகளையும் பெறமுடியாது என்னும் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்தே இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.




இரட்டை தலையுடைய பாம்பு

அமெரிக்காவில் பால் பாம்பு முட்டையில் இருந்து இரட்டை தலை பாம்பு வெளிவந்தது. 10 ஆயிரத்தில் ஒரு முட்டை மட்டுமே இப்படி குஞ்சு பொரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் குறுக்கு கோடு போட்ட டிசைனில் பிறக்கும் பாம்பு ‘மில்க் ஸ்னேக்’. அமெரிக்கா, கனடாவில் அதிகம் காணப்படும். 2 அடி முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது.
விஷம் கிடையாது. பூச்சிகள், தவளை, மண்புழு ஆகியவைதான் இதன் பிரதான உணவு. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிற வகையை சேர்ந்தது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பால் பாம்பு ஒன்று 2 மாதம் முன்பு முட்டையிட்டது. சன்ஷைன் என்ற பாம்புகள் காப்பகத்தில் இது பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த முட்டைகளில் இருந்து நேற்று குஞ்சுகள் வெளிவந்தன.
ஒரு முட்டையில் இருந்து 2 தலை பாம்பு வந்தது. இதுகுறித்து மத்திய புளோரிடா பல்கலையின் உயிரியல் பேராசிரியர் டேனியல் பார்க்கர் கூறியதாவது: பால் பாம்பு குளுமை விரும்பி என்பதால் புதர் போன்ற பகுதிகளில் காணப்படும்.
பாலை உறிஞ்சி குடிக்க இதற்கு தெரியாது. மாட்டின் மடியில் வாயை வைத்து பாலை உறிஞ்சி குடிக்கும் என்று கூறப்படுவது தவறான தகவல். வெளிர் நிறம் என்பதாலேயே பால் என்ற பெயர். விஷம் இல்லாத வகை என்பதால் இந்த இனம் நீடித்து வாழ்வது அரிது. பொதுவாக பால் பாம்பு 12 ஆண்டுகள் வாழும்.
சரணாலயத்தில் வைத்து பாதுகாத்தால் 20 ஆண்டு வரை வாழும். 10 ஆயிரத்தில் ஒரு முட்டையில் இருந்துதான் இரட்டை தலை பாம்பு வெளிவரும். இரண்டு தலை என்பதால் மூளையும் இரண்டு. உடல் செயல்பாட்டுக்கு 2 மூளையில் இருந்தும் உத்தரவுகள் வரும்.
இரண்டு வாயும் சாப்பிடும். இடது தலைக்கு “மட்கா” என்றும் வலது தலைக்கு “லென்கா” என்றும் பெயர் வைத்திருக்கிறோம்.

சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
 


விமானியின் சாதுரியமான செயற்பாட்டால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள Newark விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளானது.
ஆனால் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழிநுட்ப கோளாறு தான் காரணம் என்று விமானிகள் அறிவித்துள்ளனர்.


Tuesday, 1 November 2011


கூகுள் டாக்ஸ் தரும் வசதிகள்
 


அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.
ஆனால் கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணையதளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில் எந்த ஒரு கோப்புக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும் உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப்பட்டு நாம் தேடும் கோப்பு காட்டப்படும்.
ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன்படுத்தலாம் என்று தெரியவரும். அவை:
1. இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கணணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
2. இணைய வெளியில் இயக்கம்: கூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்திலும் உங்கள் கோப்புகளை ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும் எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் கணக்கு மட்டும் தான்.
பெர்சனல் கணணி வழியாக மட்டுமின்றி கைபேசி, நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்.பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.
3. பகிர்ந்து கொள்ளல்: கணணி பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணையதளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏனென்றால் இதன் மூலம் நாம் நம் தகவல்களை, கோப்புகளை, உருவாக்கங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால் இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் கோப்புகளை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
4. பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட் ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில் புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.
அதுவரை பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல் பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பிலிருந்து கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.
5. இணைவமைவு: எந்த ஓபரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு கோப்பை உருவாக்கினாலும், எந்த போர்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.

சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி!


கழுகுடன் மோதி மயிரிழையில் உயிர் தப்பிய பரசூட் வீரர்!

ரஷ்ய பரசூட் வீரர் ஒருவர் இந்தியாவின் இமாலய மலைப்பிரத்தேசத்தின் மேலே பறந்து கொண்டிருக்கும் போது கழுகு மோதி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கழுகு மோதி பரசூட்டின் கேபிள்களில் மாட்டிக் கொண்டது.
அந்தரத்தில் தொங்கியபடி கழுகை விடுவிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்தார்.. எவையும் பலனளிக்கவில்லை...
இதனைத் தொடர்ந்து பரசூட் பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது.
ஆனால் குறித்த மனிதர் அதிஷ்டவசமாக மேலதிகமாக வைத்திருந்த பரசூட்டை பயன்படுத்தியமையால் மரத்தில் மாட்டுப்பட்டு மயிரிழையில் காயங்கள் எதுவுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.