| வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு | ||
எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். இணையதள முகவரி | ||
Wednesday, 30 November 2011
Monday, 28 November 2011
| இதுவரை கண்டிராத கோணத்தில் அரிய உயிரினங்கள் |
தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் அழகானவை. ( மனிதனும் ஒரு சமூகவிலங்கினமே) கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை. விலங்குகளின் அழகினைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது திறமையான படப்பிடிப்பின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். இவர் புகைப்படம் எடுத்துள்ள விலங்குகள் சில.அவையும் மிகவும் அரியவை. மேலும் மிகவும் அருகிலிருந்தும் வெவ்வேறான கோணத்திலும் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் மிரட்டும் விதமாகவும் உள்ளன. ![]() ![]() ![]() ![]() |
ஜெட் எஞ்சினைப் பொருத்தி சுவிஸ் ஏப்ஸ் மலை மீது பறந்து சாகசம் !
.
![]() | |
சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல்யமான மலைத்தொடர் ஏப்ஸ் மலைத்தொடராகும். கடுங்குளிருடன் கூடிய கால நிலை அங்கே காணப்படுவதோடு அதன் உயரம் சுமார் 15,000 அடி ஆகும். அதன் மீது இதுவரை விமானங்களே பறந்துள்ள நிலையில் அதன் மேல் பறக்கும் ஆசை ரோசி என்னும் 52 வயது முதியவருக்கு... |
தனது வீட்டில் தயாரித்த ஜெட் எஞ்சினைக் கொண்டு தான் பறக்கவேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். இதற்கமைவாக அவரே அந்த எஞ்சினையும் வடிவமைத்துள்ளார்.
மணிக்கு 125 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பறக்கும் இயந்திரத்தை தயாரித்து அதனை ஒரு உடை போல அவர் அணிந்து ஏப்ஸ் மலை மீது பறந்துள்ளார். உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர் ஏப்ஸ் மலைத்தொடரின் உச்சியில் இருந்து குதித்து தனது ஜெட் எஞ்சினை(இயந்திரத்தை) ஸ்டாட் செய்து பறந்துள்ளார்.
இவ்வளவு மைல் வேகமாகப் பறக்கும் இந்த இயந்திரத்துக்கு தரை இறங்க சக்கரங்கள் இல்லை. அப்படி என்றால் அவர் எப்படி தரையிறங்கியிருப்பார் எனப் பலரும் யோசிக்கக்கூடும்.
அது தான் சிம்பிளான விடையம். பறப்பு முடிவடைந்து எஞ்சினில் எரிபொருள் தீர்ந்ததும் தனது பரசூட்டைப் பாவித்து அவர் இலகுவாக தரையிறங்கியுள்ளார் அவ்வளவுதான்.

50 வயதைக் கடந்தாலே தாம் முதியவர்கள் எனக் கருத்தும் பலர் இருக்கும்போது ரோசி என்னும் இவர் 52 வயதில் பல சாகசங்களைப் புரிந்துவருகிறார்
Sunday, 27 November 2011
சென்னை விமான நிலையத்திற்கு புதிய கார் பார்கிங் அதி பாதாளத்தில்!
.
![]() | |
சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், விமான நிலையத்திற்கு எதிரே, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தில், மல்டிலெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. |
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மல்டி லெவல் கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டது. புதிய கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ், மொத்தம், 56283 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில், ஒரே நேரத்தில், 1338 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, போதிய இடம் இல்லை. எனவே தற்காலிகமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து, அனைத்து முனையங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, விமான நிலைய ஆணையம், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தற்போதுள்ள விமான நிலையத்திற்கு எதிரே பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. அதில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்திற்கு தேவையான நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று, அங்கு கார் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் பேசும்போது "விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பாதுகாப்புத் துறை நிலத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு குத்தகையின் அடிப்படையில் நிலத்தை பெற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் பேசி எடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது என்றார்
Tuesday, 22 November 2011
கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்!
![]() | |
பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. |
இங்கு 2,426 ஜாடிகளில் பூக்கன்றுகள் தொங்குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. உண்மையில் கண்ணைக் கவரும் பல்வேறு நிறங்களில் அழகழகாக பூத்துக் குலுங்குகின்றன பூக்கள். இது உண்மையில் ஒரு சொர்க்கலோகம் தான்.






News : Source
Saturday, 19 November 2011
| கடலின் அடியில் காணப்படும் வினோதமான மியூசியம் |
அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில வினோத பொருட்களை படத்திலும், காணொளியிலும் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Subscribe to:
Posts (Atom)














