QATAR NATIONAL DAY 18-12-2011
Monday, 19 December 2011
Friday, 16 December 2011
| நியூசிலாந்தில் காணப்படும் வித்தியாசமான வடிவம் கொண்ட கற்கள் |
இவ்வகையான கற்கள் வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காணப்படும் கற்கள் கோள வடிவமானதாகவும், பெரிதான உருண்டை வடிவத்துடனும் காணப்படுகின்றன. இவ் வித்தியாசமான கற்களைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Thursday, 8 December 2011
| இதுவரை கண்டிராத பிரித்தானியாவின் இயற்கை அழகை வெளிக்கொணரும் படங்கள்! |
வானுயர் கட்டிடங்களையும் , களியாட்ட கூடங்களையும் கவர்ச்சியான பெண்களையும் மட்டும் கண்ட எம் கண்கள் பிரித்தானியாவின் இயற்கை அழகை காணப்போகிறத. இந்த படங்கள் இவ்வருடத்தின் சிறந்த புகைப்படப்பிடிப்பாளருக்கான விருதை வென்ற Charlie Waite இனால் எடுக்கப்பட்டவை! இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலநிலையில் எடுக்கப்பட்டவை அதனால் தான் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றன , இதுபோல பல படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Saturday, 3 December 2011
| ||||||||
சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளி வாயல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 'மாற்றாதே மாற்றாதே எமது கிரமத்தின் பெயரை மாற்றாதே','எங்கள்கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம்' 'சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரைமாற்றாதே' உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பள்ளிவாயல் முன்றலிலிருந்து பிரதான சந்திவரை கவன ஈர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தினர். இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் 'அல்லாஹூ அஹ்பர்'கோசத்துடன் மர்ஹூம் சதாம் ஹூஸைனை நினைவு கூர்ந்தும் கோசங்களை எழுப்பினர். சதாம் ஹூஸைன் கிராம இஸ்லாமியசமூக நல அபிவிருத்திச் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி முடிவில் தமது கிராமத்தின் பெயரை சதாம் ஹூஸைன் கிராமம் என பதிவு செய்யவேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் வேறு பெயரைத் தமது கிராமத்திற்குச் சூட்டக்கூடாது என்று கோரியும் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கிராம மக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன. ![]() ![]() ![]() ![]() ___ | ||||||||
Wednesday, 30 November 2011
| வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு | ||
எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். இணையதள முகவரி | ||
Monday, 28 November 2011
| இதுவரை கண்டிராத கோணத்தில் அரிய உயிரினங்கள் |
தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் அழகானவை. ( மனிதனும் ஒரு சமூகவிலங்கினமே) கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை. விலங்குகளின் அழகினைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது திறமையான படப்பிடிப்பின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். இவர் புகைப்படம் எடுத்துள்ள விலங்குகள் சில.அவையும் மிகவும் அரியவை. மேலும் மிகவும் அருகிலிருந்தும் வெவ்வேறான கோணத்திலும் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் மிரட்டும் விதமாகவும் உள்ளன. ![]() ![]() ![]() ![]() |
Subscribe to:
Posts (Atom)






























