கடல் சீற்றத்தால் இடம் மாறும் நாடு |
![]() எனவே இந்த நாடு வேறு இடத்திற்கு இடமாறும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஜனாதிபதி அநோடி தோங் இது தொடர்பாக பிஜி நாட்டின் ராணுவ ஆட்சியாளருடன் பேச்சு நடத்தி தன்னுடைய நாட்டு மக்கள் குடியேற சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று பிஜி நிலம் கொடுத்தால் கிரிபாதி நாட்டு மக்கள் தங்களது தீவுகளை விட்டு வெளியேறி புதிய இடத்தில் குடியேறுவார்கள். ![]() ![]() ![]() ![]() ![]() |
Wednesday, 14 March 2012
Sunday, 4 March 2012
50 அடி தூரம் பறக்கும் ”தங்க மரப் பாம்பு” |
![]() மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீற்றர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும். மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. ஏறத்தாழ ஒரு மீற்றர் நீளம் கொண்டு காணப்படும் இப்பாம்பின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்தது போன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும். இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அணிகல மரப் பாம்பு என்றும் தங்க மரப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு காணப்படும் பாம்புகளில் 50 அடி தூரத்திற்கு பறக்கும் பாம்பினைக் காணொளியில் காணலாம். |
Tuesday, 31 January 2012
அழகான தோற்றத்திலும், நடனத்திலும் காணப்படும் வெள்ளைமயில் |
![]() ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் கண் வடிவங்கள் உள்ளன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. இவற்றையும் கடந்து வெள்ளைமயில் காணப்படுகின்றன. இவற்றைக் கண்டால் நல்ல அதிஷ்டம் என்பது பெரியோர்களின் கருத்து. அவ்வாறு காணப்படும் அதிஷ்டத்தினைத் தரும் வெள்ளைமயிலின் படத்தினைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Sunday, 22 January 2012
அந்தரத்தில் பறக்கும் நட்சத்திர ஹோட்டல் |
![]() மிகப்பிரமாண்டமான உலங்கு வானூர்தியில் இப்பறக்கும் ஹோட்டல் காணப்படுவதனால் இதற்கு Hotelicopter என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 42மீட்டர்களாகவும், அகலம் 28 மீட்டர்களாகவும் காணப்படுவதுடன் 105850 கிலோகிராமை காவிச்செல்லக்கூடியது. அத்துடன் மணிக்கு 237 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது. இருந்தும் இப்பறக்கும் ஹோட்டல் இன்னும் பரிசோதனை ரீதியாகவே இருக்கின்றது. இங்குள்ள படங்கள், காணொளிகள் அனைத்தும் விளம்பரம் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டவையாகும். ![]() ![]() ![]() ![]() |
Saturday, 14 January 2012
உலகின் மிகப்பெரிய குர்ஆன் நூல்!!
.
![]() | ![]() |
உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 218 பக்கங்கள் கொண்ட இந்நூல் 30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. |
இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன.மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் நேற்று திறந்துவைக்கப்பட்டது.


Subscribe to:
Posts (Atom)