பிரித்தானியாவில் காணப்பட்ட திகைப்பூட்டும் மேகக்கூட்டம் |
![]() இந்த மேகங்கள் காற்றினால் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ![]() ![]() ![]() |
Tuesday, 27 December 2011
Saturday, 24 December 2011
ஓர் உடல் இரு தலை பிரேசில் : நாட்டில் அதிசய குழந்தை!

ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது. தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது. இந்த அதிசய சம்பவம நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது. இரட்டைத் தலைகளைக் கொண்டு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டு தலைகளும் சரியாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Emanoel and Jesus என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர். பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலமே இரட்டைத் தலையைக் கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள்ளனர்.
-
-
-
-
இந்தக் குழந்தைகளுக்கு இரு மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு எலும்புகளும், ஒரே ஒரு இதயமும் உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உணவு வழங்கப்படுகின்றது. இரண்டு வயிறு உள்ளதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை. 25 வயதான இரட்டைக் குழந்தைகளின் தாயான Maria de Nazareis கருத்துத் தெரிவிக்கையில், இந்த அதிசயமான குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Neila Dahas கருத்துத் தெரிவிக்கையில், குழந்தைகளின் உடல் சாதாரண குழந்தைகளின் உடல் தோற்றத்தைப் போலவே இருக்கின்றது

இரு தலைகளில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கின்றோம். இரண்டு தலைகளில் உள்ள மூளைகளும் வேலை செய்வதாக இருந்தால் எதை நீக்குவது என்பது குழப்பமாக உள்ளது என்றார். இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த இரண்டாவது இரட்டைத்தலைக் குழந்தைகளே இவர்களாவர். முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒக்சியன் பற்றாக்குறை காரணமாக இறந்தன.
Friday, 16 December 2011
நியூசிலாந்தில் காணப்படும் வித்தியாசமான வடிவம் கொண்ட கற்கள் |
![]() இவ்வகையான கற்கள் வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காணப்படும் கற்கள் கோள வடிவமானதாகவும், பெரிதான உருண்டை வடிவத்துடனும் காணப்படுகின்றன. இவ் வித்தியாசமான கற்களைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Thursday, 8 December 2011
இதுவரை கண்டிராத பிரித்தானியாவின் இயற்கை அழகை வெளிக்கொணரும் படங்கள்! |
![]() வானுயர் கட்டிடங்களையும் , களியாட்ட கூடங்களையும் கவர்ச்சியான பெண்களையும் மட்டும் கண்ட எம் கண்கள் பிரித்தானியாவின் இயற்கை அழகை காணப்போகிறத. இந்த படங்கள் இவ்வருடத்தின் சிறந்த புகைப்படப்பிடிப்பாளருக்கான விருதை வென்ற Charlie Waite இனால் எடுக்கப்பட்டவை! இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலநிலையில் எடுக்கப்பட்டவை அதனால் தான் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றன , இதுபோல பல படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Saturday, 3 December 2011
| ||||||||
சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளி வாயல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 'மாற்றாதே மாற்றாதே எமது கிரமத்தின் பெயரை மாற்றாதே','எங்கள்கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம்' 'சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரைமாற்றாதே' உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பள்ளிவாயல் முன்றலிலிருந்து பிரதான சந்திவரை கவன ஈர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தினர். இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் 'அல்லாஹூ அஹ்பர்'கோசத்துடன் மர்ஹூம் சதாம் ஹூஸைனை நினைவு கூர்ந்தும் கோசங்களை எழுப்பினர். சதாம் ஹூஸைன் கிராம இஸ்லாமியசமூக நல அபிவிருத்திச் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி முடிவில் தமது கிராமத்தின் பெயரை சதாம் ஹூஸைன் கிராமம் என பதிவு செய்யவேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் வேறு பெயரைத் தமது கிராமத்திற்குச் சூட்டக்கூடாது என்று கோரியும் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கிராம மக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன. ![]() ![]() ![]() ![]() ![]() |
Wednesday, 30 November 2011
வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு | ||
எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். இணையதள முகவரி |
Monday, 28 November 2011
இதுவரை கண்டிராத கோணத்தில் அரிய உயிரினங்கள் |
![]() தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் அழகானவை. ( மனிதனும் ஒரு சமூகவிலங்கினமே) கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு. அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை. விலங்குகளின் அழகினைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது திறமையான படப்பிடிப்பின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். இவர் புகைப்படம் எடுத்துள்ள விலங்குகள் சில.அவையும் மிகவும் அரியவை. மேலும் மிகவும் அருகிலிருந்தும் வெவ்வேறான கோணத்திலும் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் மிரட்டும் விதமாகவும் உள்ளன. ![]() ![]() ![]() ![]() |
ஜெட் எஞ்சினைப் பொருத்தி சுவிஸ் ஏப்ஸ் மலை மீது பறந்து சாகசம் !
.
![]() | ![]() |
சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல்யமான மலைத்தொடர் ஏப்ஸ் மலைத்தொடராகும். கடுங்குளிருடன் கூடிய கால நிலை அங்கே காணப்படுவதோடு அதன் உயரம் சுமார் 15,000 அடி ஆகும். அதன் மீது இதுவரை விமானங்களே பறந்துள்ள நிலையில் அதன் மேல் பறக்கும் ஆசை ரோசி என்னும் 52 வயது முதியவருக்கு... |
தனது வீட்டில் தயாரித்த ஜெட் எஞ்சினைக் கொண்டு தான் பறக்கவேண்டும் என அவர் தீர்மானித்துள்ளார். இதற்கமைவாக அவரே அந்த எஞ்சினையும் வடிவமைத்துள்ளார்.
மணிக்கு 125 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த பறக்கும் இயந்திரத்தை தயாரித்து அதனை ஒரு உடை போல அவர் அணிந்து ஏப்ஸ் மலை மீது பறந்துள்ளார். உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர் ஏப்ஸ் மலைத்தொடரின் உச்சியில் இருந்து குதித்து தனது ஜெட் எஞ்சினை(இயந்திரத்தை) ஸ்டாட் செய்து பறந்துள்ளார்.
இவ்வளவு மைல் வேகமாகப் பறக்கும் இந்த இயந்திரத்துக்கு தரை இறங்க சக்கரங்கள் இல்லை. அப்படி என்றால் அவர் எப்படி தரையிறங்கியிருப்பார் எனப் பலரும் யோசிக்கக்கூடும்.
அது தான் சிம்பிளான விடையம். பறப்பு முடிவடைந்து எஞ்சினில் எரிபொருள் தீர்ந்ததும் தனது பரசூட்டைப் பாவித்து அவர் இலகுவாக தரையிறங்கியுள்ளார் அவ்வளவுதான்.

50 வயதைக் கடந்தாலே தாம் முதியவர்கள் எனக் கருத்தும் பலர் இருக்கும்போது ரோசி என்னும் இவர் 52 வயதில் பல சாகசங்களைப் புரிந்துவருகிறார்
Sunday, 27 November 2011
சென்னை விமான நிலையத்திற்கு புதிய கார் பார்கிங் அதி பாதாளத்தில்!
.
![]() | ![]() |
சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், விமான நிலையத்திற்கு எதிரே, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தில், மல்டிலெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. |
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மல்டி லெவல் கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டது. புதிய கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ், மொத்தம், 56283 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில், ஒரே நேரத்தில், 1338 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, போதிய இடம் இல்லை. எனவே தற்காலிகமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து, அனைத்து முனையங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, விமான நிலைய ஆணையம், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தற்போதுள்ள விமான நிலையத்திற்கு எதிரே பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. அதில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்திற்கு தேவையான நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று, அங்கு கார் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் பேசும்போது "விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பாதுகாப்புத் துறை நிலத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு குத்தகையின் அடிப்படையில் நிலத்தை பெற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் பேசி எடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது என்றார்
Subscribe to:
Posts (Atom)