Tuesday, 27 December 2011


பிரித்தானியாவில் காணப்பட்ட திகைப்பூட்டும் மேகக்கூட்டம்

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் நகரில் வானில் அடையாளம் தெரியாத மேகம் ஒன்று காணப்பட்டது. இந்த மேகங்கள் இயல்பாக பஞ்சு போன்ற வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.
இந்த மேகங்கள் காற்றினால் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Saturday, 24 December 2011


ஓர் உடல் இரு தலை பிரேசில் : நாட்டில் அதிசய குழந்தை!

Font size:   
ஓர் உடல் இரு தலை பிரேசில் : நாட்டில் அதிசய குழந்தை!
ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது. தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது. இந்த அதிசய சம்பவம நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது. இரட்டைத் தலைகளைக் கொண்டு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டு தலைகளும் சரியாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Emanoel and Jesus என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர். பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலமே இரட்டைத் தலையைக் கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள்ளனர்.
-
-
-
-
 இந்தக் குழந்தைகளுக்கு இரு மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு எலும்புகளும், ஒரே ஒரு இதயமும் உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உணவு வழங்கப்படுகின்றது. இரண்டு வயிறு உள்ளதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை. 25 வயதான இரட்டைக் குழந்தைகளின் தாயான Maria de Nazareis கருத்துத் தெரிவிக்கையில், இந்த அதிசயமான குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Neila Dahas கருத்துத் தெரிவிக்கையில், குழந்தைகளின் உடல் சாதாரண குழந்தைகளின் உடல் தோற்றத்தைப் போலவே இருக்கின்றது
இரு தலைகளில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கின்றோம். இரண்டு தலைகளில் உள்ள மூளைகளும் வேலை செய்வதாக இருந்தால் எதை நீக்குவது என்பது குழப்பமாக உள்ளது என்றார். இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த இரண்டாவது இரட்டைத்தலைக் குழந்தைகளே இவர்களாவர். முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒக்சியன் பற்றாக்குறை காரணமாக இறந்தன.

Monday, 19 December 2011

Friday, 16 December 2011


நியூசிலாந்தில் காணப்படும் வித்தியாசமான வடிவம் கொண்ட கற்கள்

பொதுவாக கடல் மற்றும் ஆறுகளில் காணப்படும் கற்கள் காண்பதற்கு அழகான வடிவத்தில் இருந்தால் அதை எடுத்து சிலர் பாதுகாப்புடன் வைத்திருக்க விரும்புவார்கள். தற்பொழுது நியூசிலாந்தின் கிராமம் ஒன்றில் ஓர்ப்ஸ் என்று அழைக்கப்படும் வித்தியாசமான கற்கள் காணப்படுகின்றன.
இவ்வகையான கற்கள் வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காணப்படும் கற்கள் கோள வடிவமானதாகவும், பெரிதான உருண்டை வடிவத்துடனும் காணப்படுகின்றன. இவ் வித்தியாசமான கற்களைப் படத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 

Thursday, 8 December 2011


இதுவரை கண்டிராத பிரித்தானியாவின் இயற்கை அழகை வெளிக்கொணரும் படங்கள்!


வானுயர் கட்டிடங்களையும் , களியாட்ட கூடங்களையும் கவர்ச்சியான பெண்களையும் மட்டும் கண்ட எம் கண்கள் பிரித்தானியாவின் இயற்கை அழகை காணப்போகிறத.
இந்த படங்கள் இவ்வருடத்தின் சிறந்த புகைப்படப்பிடிப்பாளருக்கான விருதை வென்ற Charlie Waite இனால் எடுக்கப்பட்டவை!
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலநிலையில் எடுக்கப்பட்டவை அதனால் தான் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றன
, இதுபோல பல படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Saturday, 3 December 2011


சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு) _  
வீரகேசரி இணையம் 12/2/2011 3:16:43 PM24Share
  மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து சதாம் ஹூஸைன் கிராம மக்கள் வீதியிலிறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளி வாயல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

'மாற்றாதே மாற்றாதே எமது கிரமத்தின் பெயரை மாற்றாதே','எங்கள்கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம்' 'சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரைமாற்றாதே' உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பள்ளிவாயல் முன்றலிலிருந்து பிரதான சந்திவரை கவன ஈர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தினர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் 'அல்லாஹூ அஹ்பர்'கோசத்துடன் மர்ஹூம் சதாம் ஹூஸைனை நினைவு கூர்ந்தும் கோசங்களை எழுப்பினர். சதாம் ஹூஸைன் கிராம இஸ்லாமியசமூக நல அபிவிருத்திச் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பேரணி முடிவில் தமது கிராமத்தின் பெயரை சதாம் ஹூஸைன் கிராமம் என பதிவு செய்யவேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் வேறு பெயரைத் தமது கிராமத்திற்குச் சூட்டக்கூடாது என்று கோரியும் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கிராம மக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன.



___